Skip to main content

கோவை to ஈரோடு

 

 

கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து..

லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” என்று கேட்டார்.

“கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”

“சரி”

KMCH வந்தது.

“சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”

“அட.. இன்னும் இல்லைம்மா”

சின்னியம்பாளையம் தாண்டியது.

“கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”

“ஐயோ அம்மா.. உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்”

“சரி”

அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.

பேருந்து அவினாசியை தாண்டிக் கொண்டிருந்தது.

“கண்டக்டர் சார்... கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” - தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர். பேருந்தில் இருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது.

“பாவம் அந்தம்மா.. வண்டியைத் திருப்புய்யா.. திரும்ப கருமத்தம்பட்டில கொண்டு போய் அந்தம்மாவ விட்டுட்டு திரும்பி வா” - அநேகமாக எல்லோரும் சொன்னார்கள்...

கண்டக்டருக்கு வேறு வழி தெரியவில்லை. பேருந்தைத் திருப்பினார். வந்த வழியே கருமத்தம்பட்டிக்குச் சென்றது.

ஒரு வழியாக சில மணித் துளிகளில் கருமத்தம்பட்டி வந்தது. “எம்மா.. இறங்கும்மா” - சலித்தபடியே கண்டக்டர் கூறினார். பேருந்தில் இருந்த பயணிகளுக்கு முகத்தில் வெற்றிப் புன்னகை.

சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் மாத்திரையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.

“என்னம்மா.. கருமத்தம்பட்டில இறங்கலையா?” - கண்டக்டர் கேட்டார்.

நான் ஏன் கருமத்தம்பட்டில இறங்கணும்? கருமத்தம்பட்டி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என் பையன் சொல்லி அனுப்பினான். அதான். நான் ஈரோடுல்ல போகணும்?”

இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியது....!!

😜😜😜😜😜😜😜😜😜😜😜    https://qr.ae/pGO6jx

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem