Skip to main content

Posts

Showing posts from October, 2019

அதிரசம்

Conversation Starter · October 25 at 10:47 AM ‎ Prema Sangar ‎   to   கம கம சமையல் (சைவம்) September 1, 2018 அதிரசம் பச்சரிசி - ஒரு டம்ளர் உருண்டை வெல்லம் -. 3/4 டம்ளர். நெய் - சிறிது தண்ணீர் - 1/4 டம்ளர் ஏலக்காய் - 5 எண்ணெய் - பொரிக்க செய்முறை; பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின் கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும். நன்கு தண்ணீர் வடிந்து உலர்ந்ததும்,மிக்சியில் பொடித்து சலித்து எடுக்கவும்.இரண்டு மூன்று முறை அரைத்து சலித்து மாவாக்கி வைக்கவும். வாணலியில் தண்ணீர் விட்டு வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.பின் இறக்கி வடிகட்டி மறுபடியும் வெல்லப்பாகை கொதிக்க விடவும்! பாகு நன்கு கொதித்து நுரைத்து வரும். சற்று நேரம் கிண்டவும். உருண்டைப் பாகு பதம் வந்ததும்( கரண்டியில் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் போட்டால் கரையாமல் உருளும்) இரட்டைக் கம்பிப் பதம் வந்தாலும் சரி! கரண்டியில் எடுத்து ஊற்றும் பொழுது கரண்டியிலிருந்து இரண்டு கம்பிகள் நேராய் இழுத்துக் கொண்டு விழவேண்டும். இப்போது வாணலியை இறக்கி, பாகில் அரிசி மாவைத் தூவி, ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடுப்ப

Scenes

பனங்கிழங்கு

சிறார் கவிதை... கடைத்தெருவில் பனங்கிழங்கு கட்டு கட்டாய்க் கிடக்குது - அதுகண்டவுடன் வாங்கச் சொல்லிக் கையைப் பிடித்து இழுக்குது. காண்பதற்குச் சின்னக் கைத்தடி போல் இருக்குது - தங்கக்கம்பிகள் போல் வேர்கள் தலையில் எட்டிப் பார்த்து சிரிக்குது. வாழைப்பட்டைச் சருகு போன்ற தோலுக்குள்ளே இருப்பது - உடல் வழுவழுப்பாய்ப் பளபளக்கும் #பளிங்கு போல அமைந்தது. பாதியாகப் பிளக்கும்போது நாரை வாயைப் போன்றது - உட்பகுதியில்கால் நீட்டிக் குட்டிப் பனைமரமே தூங்குது. #சர்க்கரை_நோய்க்காரருக்கு சத்துணவாய் இருப்பது - நன்கு சப்புக்கொட்டித் தின்பதற்கும் நல்ல சுவை உடையது. சங்கடங்கள் ஏற்படுத்தும் #மலச்சிக்கலைத் தடுப்பது - நார்ச்சத்து இதனை விடவும் எதில் மிகுதியாகக் கிடைக்குது? நீரிலிட்டு வேகவைத்து நெஞ்சம் மகிழ உண்ணலாம் - தணல் நெருப்பில் கூட சுட்டு எடுத்து நினைத்தபோது உண்ணலாம். வேகவைத்த கிழங்கை உதிர்த்துப் பாசிப்பருப்பும், வெல்லமும் - தேங்காயும் துருவித் தூவி ருசித்து சுவையில் உலகை மறக்கலாம். பனங்கிழங்கின் மாவைக்கூடப் பல வகையில் சமைக்கலாம் - அதில் பனை வெல்லத்தைக் கலந்து அடையும், தோசைகளும் வார்க்கலாம்

Kanchi Periyava

  TVS Punctuality என்னை எழுப்பி விடறியா?... பெரியவா, புதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்ரத்தில் தங்கியிருந்தார். ராத்ரி கால பூஜை முடிந்ததும், தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டார்.... " நாகராஜா! நாளக்கி விடியக்காலம்பற மூணரை மணிக்கெல்லாம் நா.... ஏந்து, ஸ்நானம் பண்ணியாகணும்..! நீ ஞாபகம் வெச்சுக்கோ!" "உத்தரவு பெரியவா. ஸெரியா மூணரை மணிக்கு "ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா" நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே "மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்ளோ நன்னா இருக்காதுன்னு....."ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர" சொல்றேன்னு சொல்றியாக்கும்? ஸெரி அப்டியே பண்ணு" ராத்ரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் ஸயனத்துக்கு போய் விட்டார். நாகராஜனுக்கு ஒரே கவலை! ஏனென்றால், அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை! அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா, அவனுக்கு பூணூலுக்கு ப்ரஸன்ட் பண்ணிய பழைய வாட்ச்! அதுகூட அவனுடைய பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கிற

சந்தேகம்

  நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது . உடனடியாக அமைச்சரை வரவழைத்தார் . “ நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும் , புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன் , ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா ?” “ ஆம் மன்னா !” “ அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார் ?? அவர்களைத் தேடிக்  கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார் . அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை , புத்திசாலியைக் கொண்டு  வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம் .    முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால் ?? என்ன செய்வது சொன்னது  மன்னராயிற்றே , “ சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார் . ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும்  கூட்டிக்கொண்டு வந்தார் . அதைப் பார்த்ததும் மன்னர் , “ அமைச்சரே உமக்குக்  கணிதம் மறந்து விட்டதோ ??” “ இல்லை மன்னா ! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும் !” என்றார்  அமைச்சர் . “ தொடரும்” என்றார் மன்னர் . “ மன்னா ! நான் நாடு முழுவதும்