TVS Punctuality
என்னை எழுப்பி விடறியா?...
பெரியவா, புதுக்கோட்டையில் முகாம்.
மெயின் ரோடில் இருந்த பெரிய சத்ரத்தில் தங்கியிருந்தார்.
ராத்ரி கால பூஜை முடிந்ததும், தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டார்....
" நாகராஜா! நாளக்கி விடியக்காலம்பற மூணரை மணிக்கெல்லாம் நா.... ஏந்து, ஸ்நானம் பண்ணியாகணும்..! நீ ஞாபகம் வெச்சுக்கோ!"
"உத்தரவு பெரியவா. ஸெரியா மூணரை மணிக்கு "ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா"
நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே "மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்ளோ நன்னா இருக்காதுன்னு....."ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர" சொல்றேன்னு சொல்றியாக்கும்? ஸெரி அப்டியே பண்ணு"
ராத்ரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் ஸயனத்துக்கு போய் விட்டார்.
நாகராஜனுக்கு ஒரே கவலை! ஏனென்றால், அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை! அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா, அவனுக்கு பூணூலுக்கு ப்ரஸன்ட் பண்ணிய பழைய வாட்ச்!
அதுகூட அவனுடைய பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கிறது.
ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது வாட்சைக் கட்டிக் கொள்ளவது அவ்வளவு மர்யாதையாக இருக்காது என்பதால்தான்.
இப்போதோ.... பெரியவாளையே எழுப்பிவிட வேண்டிய “மஹா பொறுப்பு” வேறு!
தான்பாட்டுக்கு படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்?
என்ன பண்ணுவது?
நேராக போய் தன் ட்ரங்க் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். பெரியவா ஸயனித்திருக்கும் அறைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான்.
ஸரியாக மணி 3.30 !
கைகளை பவ்யமாகக் கட்டி கொண்டு, பெரியவா ஸயன அறை வாஸலில் நின்று கொண்டு, ஸன்னமாக ஸுப்ரபாத நாமாவளி போட்டான்.....
"ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர"
"ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர"
சிறிது நேரத்தில் ஸாக்ஷாத் பரமேஶ்வரனான பெரியவா, மந்தஹாஸத்தோடு வெளியே வந்து, அவனுக்கே அவனுக்கு மட்டும், ஸ்பெஷல் "விஶ்வரூப" தர்ஶனம் குடுத்தார்.
எப்பேர்ப்பட்ட பாக்யம்!!
ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகராஜன்.
அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், ஸரியாக மூணரை மணிக்கு "ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர" நாமாவளி கோஷம், பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஶ்வரூப தர்ஶனம், அதுவும் இவனுக்கு மட்டும், ப்ரத்யேகமாக!... என்று, திக்கு முக்காடித்தான் போனான்!
ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு தூக்கத்தை வெல்லும் பலத்தை குடுத்தது.
நான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான்!
"ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர.... ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர"
மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது!
தூக்கிவாரிப் போட்டது!
பதறிக் கொண்டு எழுந்தான்!
எதிரே........ கருணையோடு சிரித்தபடி, அவனை தேடி வந்து விஶ்வரூப தர்ஶனம் தந்தான், அந்த ஸர்வஸுலபனான பரமேஶ்வரன் !!!
"கொழந்தே! மணி ஸெரியா மூண்ரை ஆறதுடா! அஸதி-ல பாவம் நீ தூங்கி போய்ட்ட போலருக்கு! பாவம்....... ஒனக்கும்தான்.... நாள் பூ....ரா கைங்கர்யம்..! ஶரீர ஶ்ரமம் இருக்குமோன்னோ?"
மிகுந்த வாத்ஸல்யத்துடன் சிரித்தபடியே சொல்லிவிட்டு, அவர் பாட்டுக்கு, வாஸல் பக்கம் போய்விட்டார்!
வாட்சை பார்த்தால் மூணரை!
அது எப்படீ?....
இவனுக்கோ.... ஒரே ஆஶ்சர்யம் !
“பெரியவாட்ட வாட்சே கெடையாதே! பின்ன... எப்டி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்!! ச்சே!.. இனிமே இப்டி கும்பகர்ண தூக்கம் தூங்கக் கூடாது!....
இப்படியொரு உறுதியோடு, மறுநாள்.... பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலம் ஸஹிதமாக அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன்.... ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான்.
ஆனால்... பாவம்! தன்னையறியாமல் தூங்கிவிட்டான்.
"ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர... ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர"...
சிரித்துக் கொண்டே பெரியவா போட்ட நாமாவளியால், படாரென்று அடித்துத் தட்டிக் கொண்டு எழுந்தான்....!
மணி ஸரியாக மூணரை!
முந்தின நாள் போலவே, பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டேதான் நாமாவளி போட்டு அவனை எழுப்பியிருக்கிறார்.
ஆஶ்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகராஜன் !
இனி இதை தெரிந்து கொள்ளாமல் விடுவதில்லை! அன்று மத்யான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான்.
"என்ன விஷயமோ?...."
"ஒண்ணுமில்ல பெரியவா..........."
"எனக்கு தெரியுமே! ரெண்டு நாளா... நாம தூங்கிப் போய்டறோமே....! பெரியவா மட்டும் எப்டி அவ்ளோ கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார்? அவர்ட்ட கடிகாரம் கூட கெடையாதே!.... பின்ன.... எப்டி முழிச்சுக்கறார்...ன்னு நன்னா கொழம்பிண்டிருக்கியோன்னோ? "
"ஆமா பெரியவா..... என்னன்னே தெரியல!......ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் ஸெரியா மூணரைக்கு ஏந்து வந்து, என்னையும் எழுப்பி விடறா மாதிரி ஆய்டறது!... எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு பெரியவா! மூணரை மணின்னு... வாட்ச் கூட இல்லாம..... ஸெரியா..... எப்டி பெரியவா....?."
"ஏன்? ஏதாவது கர்ண யக்ஷிணி என்னோட காதுல வந்து "மணி மூணரை"-ன்னு சொல்றதோன்னு ஸந்தேஹமோ ஒனக்கு?"
கொள்ளை அழகாக சிரித்தார்.
"என்னோட காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லல..! மணி மூணரைன்னு என்னோட காதுல வந்து சொன்னது....... ஒரு "பஸ்"....!
“பஸ்ஸா...!!”
“அதுவும் மதுரை டி.வி.ஸுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ்!! ஆஶ்சர்யப்படாதே!! மொதல் நாள்..... ஸெரியா மூணரைக்கு நீ "ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர" சொல்லி எழுப்பினேல்லியோ?... அப்போ வாஸப்பக்கம் வந்தப்போ..... ஒரு பஸ்ஸு, நம்ம சத்ர வாஸலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு! அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை கரெக்டா மூணரைக்கு பாத்தேன்!
....அப்றமா விஜாரிச்சா....... அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் ! மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா.! விடியக்காலம் ஸெரியா மூணரைக்கு, நம்ம சத்ரத்தோட வாஸலை அந்த பஸ் தாண்டிப் போறது..! ஒரு ஸெகண்ட் அப்டி.... இப்டி மாறல!... டி.வி.எஸ் பஸ்.... ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே...... நம்ம கடியாரத்த ஸெரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...! அது வாஸ்தவம்தான்! மூணு நாளும் ஸெரியா பாத்து வெச்சுண்டேன்! நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட ஸத்தம் கேட்ட ஒடனேயே.... தானாவே.. எழுந்துட்டேன்!........வேற பெரிய ரஹஸ்யம் ஒண்ணுமே இல்லடா!"
பெரியவா மிகவும் ரஸித்துச் சிரித்தார்.
ஒரு பஸ் போவதைக் கூட கவனித்து, அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனித்து, அதில் உள்ள நல்லதை மட்டும் ஸ்லாஹித்து [புகழ்ந்து] கூறும் நுணுக்கமான பேரறிவு, பரந்த குணம்..... பெரியவாளுக்கு இருப்பதில் ஆஶ்சர்யம் இல்லை!......
ஏனென்றால், பெரியவா என்றாலே [பெரிய], பரந்த பேரறிவுதானே!!
P for Perfection என்பதைவிட, P for Periyava என்று சொல்லலாம்!
நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினஸரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்ரஹம் பண்ணவேண்டி ப்ரார்த்திப்போம்.
இப்போது...."foreign-ல பஸ், ட்ரெய்ன்-ல்லாம், அப்டி perfect time-க்கு வரும், போகும்! இந்தியா மாதிரி இல்லை!" என்று சொல்கிறோம்.
ஆனால், மதுரை TVS கம்பெனி அப்படியொரு Perfection-ஐ கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்!
இப்போது அரசு பஸ் ஸர்வீஸ் பற்றி கேட்கவே வேண்டாம்......
தவறு யாரிடம்?
TVS management மாதிரி, நம் அரசும் இருந்திருந்தால், இந்தியாவும் என்றைக்கோ உயர்ந்த நிலைக்கு போயிருக்கும்!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Comments
Post a Comment