Skip to main content

Posts

Showing posts from November, 2017
பத்து ரூபாய் செலவில் ஒரு பிரபல அரசியல் தலைவரின் திருமணம் முடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய அரசியலில், மா.செ முதல் மாநில அமைச்சர்களின் 'இல்ல திருமண' விழாக்களில் பணம் படும் பாடு நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் தோழர். ஜீவா அவர்கள் வெறும் பத்து ரூபாயில் தன் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார். தனது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான பத்துக்கும் உட்பட்ட தோழர்களை மட்டும் அழைத்து அவர்களில் ஒருவரிடம் ஒரு பத்து ரூபாயை கொடுத்து இரண்டு மல்லிகைப்பூ மாலை மீதமுள்ள பணத்திற்கு 'சாக்லேட்' மிட்டாய்களையும் வாங்கி வர சொல்லி, மணமக்கள் அந்த மல்லிகைபூ மாலையை மாற்றிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் கையில் ஆளுக்கு ஒரு மிட்டாய் கொடுத்து அவ்வளவுதான் திருமணம் முடிந்து விட்டது எல்லோரும் போகலாம் என்றாராம். .......................... ........ தான் எடுத்துகொண்ட அறம் சார்ந்த சிந்தாந்தத்திற்கு தன் வாழ்நாள் இறுதிவரை உயிரூட்டிய, மிகச்சொற்பமான அரசியல் தலைவர்களுள் ஒருவர்தான் தோழர்.திரு.ஜீவானந்தம். காந்திக்கு இணையாக வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் அவரும் ஒருவர். கல்வி க

அப்பா.. ..

அப்பா.. .. அளவுக்கதிகமான அன்பை ஆழ்மனதில் வைத்துகொண்டு அன்பிற்காக ஏங்கும் ஆண்டவனின் அற்புதபடைப்பு... அவர் அதட்டல் போதும் என்னை ஆட்டிபடைக்க அவர் அன்பு ஒன்றே போதும் என்னை ஆக்ரமிக்க... நான் பிறந்த அந்நாள்முதல் என் பிந்தயநாளுக்காக உழைத்து என்னை தழைக்க வைத்தவர்.... அன்னைமடியை விட அப்பாவின் தோல்மடி தூக்கம் ஆனந்தத்தின் அடுத்த கட்டம். .. அவர் என் குறைகளை சுட்டிகாட்டவில்லை எனில் நான் எப்போதோ குட்டிசுவராயிருப்பேன்... அவர் கற்றுதரும் பாடங்கள் ஒவ்வொன்றும் பலநூறு புத்தகங்களின் தேடினாலும் கிடைக்காது... ஆயிரம் சோகம் இருந்தாலும் அப்பா என நான் சொல்லும் போது அனைத்தையும் மறந்து என்னை அரவனைப்பார்... ஆயிரம் கஸ்டம் இருந்தாலும் என் கைபணம் தர மறந்ததில்லை.... ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கடந்தாலும் அவர் அன்பு எப்போதும் மாறாது....

வாழ்க்கை வாழ்வதற்கே

1) பெற்றோர்களை நோகடிக்காதே ... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும் ...!! 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே ... வாழ்க்கை போய் விடும் ... வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ ...!! 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே ... நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான் ...!! 4) நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே , அதற்காக நேர்மையை கை விட்டு விடாதே ... அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும் . ..!! 5) வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே ... சந்தோஷம் குறைவதற்கும் , பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம் ...!! 6) உன் அம்மாவிற்காக ஒரு போதும் மனைவியை விட்டு கொடுக்காதே ... அவள் உனக்காக அப்பா அம்மாவையே விட்டு வந்தவள் ...!! 7) உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம் ... நீயும் உண்மையாய் இரு ...!! 8) அடுத்தவர்களுக்கு தீங்கு

Scholarship

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள் பொறியியல் , மருத்துவம் பட்டப்படிப்பு , பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள்  தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம் . அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு  உருவாக்கியுள்ளது . இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட  வேண்டும் . மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க    தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது . இது தொடர்பாக கடந்த 21- ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும் , நிதி நிறுவனங்களுக்கும்  உத்தரவிட்டுள்ளது . அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும் , ‘ பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம்  வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது . ஆதலால் , இனிமேல் , 12- வகுப்பு முடித்த வசதியில்லா ஏழை மாணவ , மாணவிகள் பொறியல் , மருத்துவ படிப்புக்கும் ,   பட்டமேற்படிப்புகள் படிக்க கடன் பெற வங்கியில் வரிசையில் ந

நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை.

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும் . அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது ?  நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா ?! முடியாது .  காரணம் , அது , கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை ; ஆகவே , அவனுக்கும் சொந்தம் ! நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா ? அதுவும் முடியாது ; அது , மேல் மாடியில் இருப்பவனுடைய தரை .  ஆகவே , அவனுக்கும் சொந்தமானது ! சரி ... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா ? முடியவே முடியாது ...  அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது ! சரி , இடது பக்க சுவர் ?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது ! நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள் , லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது ! சரி , நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா ? நிச்சயமாக இல்லை ... இடம் எல்லோருக்குமே பொதுவானது ! அப்படியென்றால் , * அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன ?!* 1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPA

குதம்பைச்சித்தர் பாடல்

*குதம்பைச்சித்தர் பாடல்* தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் பார்க்கப் படாதானடி குதம்பாய் பார்க்கப்படா தானடி. வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் இட்டமாய்ப் பார்ப்பாயடி. தாவார மில்லை தனக்கொரு வீடில்லை தேவார மேதுக்கடி குதம்பாய் தேவார மேதுக்கடி என்றும் அழியாமை எங்கு நிறைவாகி நின்றது பிரம்மடி குதம்பாய் நின்றது பிரம்மடி அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி.
  மழையே என் ஏக்கம் தீர்க்க வா ஆங்கிலத்தில் ‘மழையே மழையே போய் விடு’ (Rain Rain Go Away) என்று மழலைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு பதில், மழையை வரவேற்கும் பாட்டு சொ ல்லிக் கொடுப்போமா?   மழையே மழையே வா வா மழையே மழையே வா வா இழையாய் இன்புற பொழிந்தே வா வானம் பொழியும் புனிதமே வா தானம் தர்மம் தழைத்திட வா அமுதமாய் அள்ளிப் பருகிட வா குமுதம் மலர்ந்திட குதித்தே வா குளங்கள், ஏரி நிரம்பிட வா வளங்கள் எங்கும் பொங்கிட வா பயிர்கள் வளர்ந்து செழித்திட வா உயிர்கள் வாழ்ந்து உயர்ந்திட வா தாண்டித் தாவித் துள்ளியே வா மண்ணின் தரத்தை உயர்த்திட வா நன்றி சொல்லி நாள் தோறும் என்றும் உன்னைப் போற்றிடுவோம்