என் உடல் மக்கத் தொடங்கிவிட்டது..
நான் புதைக்கப் பட்டதிலிருந்து
இந்த மண் என்னை சுமந்திருக்கிறது...
அது விடியற்பொழுதாக இருக்க வேண்டும்
அந்த சிறுமி எனக்கு வழக்கமாக தண்ணீர் ஊற்ற வருவது அப்போதுதான்..
என்னை ஒரு மரமாக
வளர்த்து விடவேண்டும் என்ற ஆசை அவளுக்கு...
என்னை கையில் வைத்து
வானைநோக்கி வேண்டிக்கொண்டு
புதைத்தது நன்றாக நினைவிலிருக்கிறது...
அவளுக்கு இழைப்பாறளாகவும்
அவளின் மௌனத்திற்கான துணையாகவும்
அவளின் மகிழ்வுக்கான கருவாகவும்
என்னால் உருவம் கொள்ள முடியாது...
அவளுக்கு என் மன்னிப்பையும்
ஆறுதலையும் எவ்வாறு கூறுவேன்...
நான் உரமாகிக் கொண்டிருக்கிறேன்...
அவளின் நம்பிக்கைக்கும் வேண்டுதலுக்கும்
குறைந்தபட்ச அற்பணிப்பையாவது நான் அளிக்காமல் இறக்கமுடியாது...
என் அருகில் ஒரு துளை உருவாகிறது
திடீரென்று.........
திடீரென்று.........
Comments
Post a Comment