Skip to main content

 clay stove pictures க்கான பட முடிவு








ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி,
1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும்
1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும்.
தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள்.
காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது.
மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு வெட்டவேண்டும். எப்படி அதை உபயோகித்தோம் என்று இப்போது மலைப்பாயிருக்கு.
கரி உபயோகித்து நிதானமான சூட்டில் சமையல் செய்ய குமுட்டி சிறிய அளவில் உபயோகப்பட்டது. இது மண்ணாலோ அல்லது இரும்பினாலோ ஆனது.
காலப் போக்கில் மண் அடுப்பு மாறி கெரஸின் ஸ்டவ் உபயோகத்திற்கு வந்தது. அதிலும் திரி ஸ்டவ் மற்றும் பம்ப் ஸ்டவ் என இரு வகை உண்டு. திரி ஸ்டவ்வில் திரி மாட்டுவது பெரிய காரியம். சரியான சைஸ் திரி பெரும்பாலும் கிடைக்காது. அதை மாட்டுவதற்குள் கை கொப்பளித்துவிடும் பம்ப் ஸ்டவ்வில் கெரஸினும் காற்றும் சரி அளவில் பொருந்தி எரியும் வரை பகீரத ப்ரயத்தனம்தான். ஸ்டவ் உயரத்திற்கு தலையை குனிந்து கொண்டு ஸ்டவ் நாசிலை (nozzle) ப்ரத்யேகமான ஊசியால் க்ளீன் செயவது "கடினம் "என்பது மிக சுலபமான வார்த்தை.
காஸ் அடுப்பு எல்லாவற்றிற்கும் தீர்வாக அமைந்தது. அரசாங்க ஆதரிப்பால் மள மளவென எல்லோர் வீட்டிலும் இடம் பெற்றது. ஃப்ளாட்கள் பெருகியதற்கு இதன் பங்கு மிக அதிகம். இந்தத் தலைமுறையினர் பெரும்பாலோருக்கு காஸ் அடுப்புக்கு முன் எப்படி சமைததார்கள் என்பதே தெரியாது. அந்த காலத்திய சாதனங்களான கோடாரி, ஊதுகுழல், சாமணம், திரி நாடா பற்றி தெரியாது. எலெக்ட்ரிக் அவன, மைக்ரோவேவ் அவன், இண்டக்க்ஷன் ஸ்டவ் என பல மார்க்கட்டில் இப்போது வந்துவிட்டாலும் காஸ் அடுப்புதான் ராஜா.
உள்ளூரில் கிடைக்கும் மண், விறகு, சுள்ளி இவை சிக்கலில்லாத எரி தேவை தீர்வு. அவசரம் என்பது இல்லாமல். உணவில் ருசிக்கு, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் தரவேண்டும். இன்றும் மண் அடுப்பில், மண் பானையில் செய்த சமையலுக்கு ருசி அதிகம் என்று சொல்லும் ஆர்வலரகள் உள்ளனர்.

 

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...