ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்! நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை. ஆகவே, அவனுக்கும் சொந்தமானது! சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது... அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது! சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது! நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது! சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால், *அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!* 1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது! சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது! அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம், ஆனால், என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது! கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான். இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்; அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம், மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்! ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது. கொண்டுசெல்லவும் முடியாது! என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம், ஆனால், அவர் அப்பாவின் மனைவி, அவருக்கு தான் சொந்தம். அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது! சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை. அவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்! தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது, காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது! இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை! நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை... பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்!? நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம். சக மனிதர்களையும் நேசிப்போம். ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்... எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்...
நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்... குருநாதர் சொல்கிறார்... *அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும், *அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும், *உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும், *குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது, *பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது, *மெலிந்தவளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய், *வெள்ளையானவளை முடிக்காதே! அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும், *கருத்தவளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும், *படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள், *படித்தவளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள், *பணக்காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது, *ஏழையை முடிக்காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும், *அதிக அன்பானவளை முடிக்காதே! நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது, *கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகிவிடும், *அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உன் மீது சந்தேகம் கொள்வாள், *ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய், *அமைதியானவளை முடிக்கதே! நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள், *பரபரப்பானவளை முடிக்காதே! நீ சொல்வது அவள் காதில் விழாது, *ஊருக்குள்ளே பார்த்து முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள், *தூரத்தில் பார்த்தும் முடிக்காதே! அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும், என்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குருநாதர்... இதை கேட்ட அந்த வாலிபன் கடுமையான கோபத்தோடு சொல்கிறான்... "ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்!" என்று சொல்லிவிடுங்களேன். :( குரு மென்மையான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்... "சொன்னா எவன்பா! கேட்கிறான்!" :) மண் மீது ஆசைபட்ட பல்வாழ் தேவனும் இறந்து விட்டான். பெண் மீது ஆசைபட்ட பாகுபலியும்
இறந்துவிட்டான்... எதற்கும் ஆசைபடாத கட்டப்பா இறுதி வரை உயிருடன் இருந்தார்... கெட்டப்பா வாழ்றத விட கட்டப்பா மாதிரி வாழலாம்....😂😂😂
Comments
Post a Comment