Skip to main content

Scholarship


மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்
பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் 
தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு 
உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட 
வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க 
 தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் 
உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் 
வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
ஆதலால், இனிமேல், 12-வகுப்பு முடித்த வசதியில்லா  ஏழை மாணவ, மாணவிகள் பொறியல், மருத்துவ படிப்புக்கும்,
 பட்டமேற்படிப்புகள் படிக்க கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான 
விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும்
 தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் 
சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும்.  இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு 
வந்துள்ளது.

 “ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ 
https://www.vidhyalakshmi.co.in  எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான
 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem