Skip to main content

Posts

Showing posts from 2019

போதி தர்மர்

காட்டில் கிடக்கும் மரக் கிளைகள் ஒன்றை ஊன்றுக் கோலாக பயன்படுத்த சேகரித்து சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறார் போதி தர்மர். அவர் கையில் அம்பு அடிபட்ட பறவை ஒன்று விழுகிறது. ‘இவளின் முன் ஜென்ம வாழ்க்கை இவளை இன்று பறவையாக மாற்றி உள்ளது. விளைவுகள் மற்றும் சூழல்களால்.. அம்பால் அட்பட்டு துன்புற நேர்ந்தது. உன்னைக் காப்பாற்றுகிறேன். அடுத்து மனித பிறவி எடுத்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்’ என எண்ணியவாறே பறவைக்கு முதலுதவி செய்து பறக்க விடுகிறார். அடிபட்ட பறவையைத் தேடி வேடன் அங்கே வருகிறான். “விலங்குகளையா தேடுகிறாய்!?” என போதி தர்மர் கேட்கிறார். “ஆமாம்” என கூறிக் கொண்டே பறவையைத் தேடிக் கொண்டே இருக்கிறான். “ஓர் அம்பால் எத்தனை விலங்கை தைப்பாய்!?” “ஒன்று” என சொல்லிக் கொண்டே நிமிர்ந்து, “அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டு” என்று சிரிக்கிறான் வேடன். “இரண்டு? ஓர் அம்பில் இரண்டு!?” என்று கேட்டு விட்டு, “எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கர்ப்பமான மிருகமொன்றை அடிப்பேன்” என்கிறார் போதி தர்மர். “ஆகா.. அப்ப இரண்டிற்கும் மேல்” என்று குதூகலிக்கிறான் வேடன். “நான் ஒன்றைக் கொன்றால்.. நான் கொல்லும் அந்த ஒன

Kathambam

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது . கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது . இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை . வண்ண வண்ண விளக்குகள் , அழகான நதிகள் , மரங்கள் , எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது . எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும் . அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது . ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை . அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது . காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன ? அவரிடம் குருவி வழி கேட்டது . “ எனக்கு முழு விபரம் தெரியாது . தெரிந்த வரை சொல்கிறேன் . அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர் . ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது . குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது . குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க , அந்த வழியே ஒரு பாம்பு வந்தது . பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி , “ அந்த

கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு

# ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார். கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான். எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன். இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? எனக்கேட்க.. எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா.... ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ-

உழைப்பும் பிழைப்பும்:

நுனிவேர் ஆர்கானிக் December 2 at 9:11 AM · மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு காட்டில் வாழ்நாள் பூரா வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே என்னை மாதிரி ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போ

Thamizh Poem

உருப்படியான வீட்டுக் குறிப்புகள்

அதிரடி அறுபது! உருப்படியான வீட்டுக் குறிப்புகள் *என்னதான் கழுவினாலும் ஃபிளாஸ்க்கில் ஒருமாதிரி மக்கிப்போன வாசனை வந்துக்கொண்டே இருக்கும். வினிகர் போட்டு கழுவினால் இந்த வாசனையை துரத்தலாம். *மழைக்காலத்தில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்துப் போய் அவசரத்துக்கு பற்றவே பற்றாது. தீப்பெட்டியினுள் பத்து, பதினைந்து அரிசியை போட்டு, பெட்டியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடிவைத்துவிட்டால் எப்போது பற்றவைத்தாலும் ஒரே முயற்சியில் பற்றிக் கொள்ளும். *பீங்கான் கப்பில் காபி மற்றும் டீக்கறை அடிக்கடி படிந்துவிடும். வெங்காயத்தை வெட்டி இந்த கறையில் தேய்த்தால் பீங்கான் பளிச். *வாங்கி வைத்த பால் பாக்கெட்டை ஃப்ரிட்ஜில் வைக்க முடியவில்லை. கரெண்ட் கட். அவசரத்துக்கு காய்ச்சவும் நேரமில்லை. பதட்டப்படாதீர்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பால் பாக்கெட்டை போட்டு வைத்துவிட்டால் போதும். நான்கு மணி நேரம் கழித்துக்கூட காய்ச்சிக் கொள்ளலாம். *வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையா? கவலை வேண்டாம். இட்லிதோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பாவிலோ பக்கெட்டிலோ போட்டு மூடிவைத்துவி