அதிரடி அறுபது! உருப்படியான வீட்டுக் குறிப்புகள்
*என்னதான் கழுவினாலும் ஃபிளாஸ்க்கில் ஒருமாதிரி மக்கிப்போன வாசனை வந்துக்கொண்டே இருக்கும். வினிகர் போட்டு கழுவினால் இந்த வாசனையை துரத்தலாம்.
*மழைக்காலத்தில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்துப் போய் அவசரத்துக்கு பற்றவே பற்றாது. தீப்பெட்டியினுள் பத்து, பதினைந்து அரிசியை போட்டு, பெட்டியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடிவைத்துவிட்டால் எப்போது பற்றவைத்தாலும் ஒரே முயற்சியில் பற்றிக் கொள்ளும்.
*பீங்கான் கப்பில் காபி மற்றும் டீக்கறை அடிக்கடி படிந்துவிடும். வெங்காயத்தை வெட்டி இந்த கறையில் தேய்த்தால் பீங்கான் பளிச்.
*வாங்கி வைத்த பால் பாக்கெட்டை ஃப்ரிட்ஜில் வைக்க முடியவில்லை. கரெண்ட் கட். அவசரத்துக்கு காய்ச்சவும் நேரமில்லை. பதட்டப்படாதீர்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பால் பாக்கெட்டை போட்டு வைத்துவிட்டால் போதும். நான்கு மணி நேரம் கழித்துக்கூட காய்ச்சிக் கொள்ளலாம்.
*வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையா? கவலை வேண்டாம். இட்லிதோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பாவிலோ பக்கெட்டிலோ போட்டு மூடிவைத்துவிட்டால் புளிக்கவே புளிக்காது.
*வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில் ஒருமாதிரி வாசனை தேங்கிவிடும். இந்த வாடையை போக்க நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி தண்ணீரில் கழுவிவிட்டு நறுக்கலாம்.
*கிச்சனில் இருக்கும் பாத்திரம் கழுவும் தொட்டியை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும் அழுக்கு முழுமையாக போகாது. கழுவுவதற்கு முன்பாக பழைய செய்தித்தாள்களை கொண்டு தேய்த்துவிட்டு கழுவினால் பலன் பளிச்சென்று இருக்கும்.
*காய்கறிகள் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காதீர்கள். அந்த நீரை நீங்கள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றினால் ஊட்டமாக வளரும்.
*கேஸ் ஸ்டவ்வை எவ்வளவு துடைத்தாலும் திருப்தி தருமளவுக்கு க்ளீன் ஆகாது. தேங்காய் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து அதில் துணியை நனைத்து துடைத்துப் பாருங்கள். திருப்திகரமாக பளீரிடும்.
* மீன் சமைத்து சாப்பிட்ட பின்னும் சமைத்த பாத்திரத்தை எவ்வளவுதான் கழுவினாலும் வாடை தூக்கும். கொஞ்சம் சீயக்காய் தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை
துலக்கினால் வாசனை போயே போச்சு!
* மீனை சுத்தம் செய்து பல மணி நேரங்கள் கழித்தும் கையில் அந்த வாசம் அடித்துக் கொண்டே இருக்கிறதா? கவலையே வேண்டாம். மீனை கையில் எடுப்பதற்கு முன்பாக சில சொட்டு சமையல் எண்ணெயை உள்ளங்கையில் விட்டு தேய்த்துக் கொள்ளுங்கள். இந்தத் தொல்லையே இல்லை.
*வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க பாட்டி காலத்து டெக்னிக். வாங்கிய காற்கறிகள் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும். துணி காய காய அவ்வப்போது ஈரமாக்கி வைத்துக் கொள்வது உங்கள் சமர்த்து.
*பால் குக்கரின் அடியில் ஒட்டிக்கொண்டு என்னதான் தேய்த்தாலும் போகாமல் அடம் பிடிக்கும். பாலை காய்ச்சுவதற்கு முன்பாக பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டால் இந்த பிரச்சினையே வராது.
*கேஸ் ஆண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? குற்றம் சிலிண்டரில் அல்ல. கீரையை தவிர எதை சமைத்தாலும் பாத்திரத்தை மூடியே வைத்திருங்கள். எரிபொருள் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் கணிசமாக மிச்சமாகும்.
*வெயில் காலத்தில் வாங்கி வைத்த கறிவேப்பிலை வாடி அடிக்கடி ‘கரு’வேப்பிலை ஆகிவிடும். அலுமினியப் பாத்திரத்தில் இலையை போட்டு மூடி வைத்துவிட்டால் இந்தத் தொல்லையை தவிர்த்து விடலாம்.
* கடலை எண்ணெய் கெட்டுப் போய்விடுகிறது என்று கடைக்காரரிடம் சண்டைக்கு போகாதீர்கள். அதில் சிறிதளவு புளியை போட்டு வையுங்கள். எண்ணெய் அப்படியே புதுசாக இருக்கும்.
* கறிவேப்பிலையையும், கொத்துமல்லியையும் வதக்கி சமைக்காதீர்கள். அப்படியே பச்சையாக உணவில் சேர்த்தால் பார்ப்பதற்கும்
பக்காவாக இருக்கும். ஊட்டச்சத்துகளும் அதில் அப்படியே தங்கும்.
*கேரட்டு கசக்கிறதா? தப்பு உங்களுடையதுதான். ஃப்ரிட்ஜில் கேரட்டையும், ஆப்பிளையும் அருகருகே வைத்திருந்திருப்பீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒருவிதமான வாயு கேரட்டை கசக்கச் செய்துவிடும் பண்பு
கொண்டது. ஆப்பிள் அல்லது கேரட்... இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே உங்கள் ஃப்ரிட்ஜில் இடஒதுக்கீடு கொடுங்கள்.
*சர்க்கரை டின்னில் எறும்புத் தொல்லை என்பது காலம் காலமாக தொடரும் தொந்தரவு. சர்க்கரை டின்னில் நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது. டின்னை திறந்ததுமே கும்மென்ற வாசனை உங்களுக்கு போனஸ்.
சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி அடிக்கடி கூர் மழுங்கி மொக்கை
ஆகிவிடுகிறதா? கவலை வேண்டாம். பயன்படுத்திய பிறகு துடைத்துவிட்டு தேங்காய்
எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
*டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
*மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் கடாயை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப்பொரியும்.
*தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
*வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால் தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
*தோசைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
*மைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
*ட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போது தான் ஜாம் நீண்டநாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
*காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
*குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.
*நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கிவிடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
*சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத்தேய்க்கலாம்.
*வாழைத் தண்டுகள், கீரைத் தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
*பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
*வீட்டிலேயே கேக் செய்யும் போது, பேக்கிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
*தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
*இனிப்புகள் தயாரிக்கும் போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
*வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
*ஊறுகாய் தயாரிக்கும் போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது. மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
*கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
*வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில்போட்டுபின்னர்நறுக்கினால்கண்களில்
கண்ணீர் வராது.
*பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு அவற்றை போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும். முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
*இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
*காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு
ருசி கெடாமல் இருக்கும்.
*தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட
சமைக்கலாம்.
**முட்டைக்கோசை சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
*உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
*தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும். முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைகாய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
*வெயில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்று வலி பறந்து
விடும். ரோஜா இதழ்களுடன் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் சூடு குறையும்.
வாய் மணக்கும்.
*இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊற வைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும். கடைந்தெடுத்த மோரில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது. மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும்.
*மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தையும் வன்மையையும் தரக்கூடியது. பட்டுப் புடவையைத் துவைத்த பிறகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீரில் கடைசியாக ஒரு முறை அலசி எடுக்கவும். புடவை புதிது போல பளபளப்பாகும். புடவையில் ஒரு நறுமணமும் வரும். வைட்டமின் ஏக்குத் தனியாக ஒரு மரியாதை உண்டு. வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.
*வெப்பத்தால் வரும் வயிற்றுவலிக்கு ஒரு டம்ளர் மோரில் சிறிது உப்பு, சமையல் சோடா அரை கரண்டி கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும். உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது. வேர்க் கடலையை வெல்லத்துடன் சாப்பிட வேண்டும். உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்கை இன்னொரு பொருளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.
*மண்பாத்திரத்தில் காய்ச்சிய நீரை உணவுக்குப் பின் சாப்பிட்டால் புளியேப்பம், காய்ச்சல் நீங்கும். காலை எழுந்தவுடன் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது. தன் பிம்பத்தையே பார்ப்பது மகிழ்ச்சியானது. மாரடைப்பைத் தடுக்க, கொழுப்புச் சத்து மிக்க பொருட்களை சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். பாமாயில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மது, புகைப் பழக்கத்தைக் கைவிடவேண்டும். உணவில் உப்பின் அளவு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் என்ற அளவில் இருக்கவேண்டும்.
*காதில் சேரும் அழுக்கை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காதுகளில் உள்ள சிறு மயிர்க்கால்களால் அழுக்கு வெளியேற்றப்
படும். காது அழுக்கை எடுக்கிறேன் என்று சும்மா காதைக் குடையக் கூடாது.
*கடலை மாவு, செம்பருத்தி, வெள்ளரிக்காய், ஆரஞ்சுத்தோல் முக அழகிற்கு ஆரோக்கியமானவை. செயற்கைப் பொருட்களை விட இயற்கையாகக் கிடைப்பவை சிறந்தது. தீராத இருமல் இருந்தால், மிளகைப் பொடி செய்து வெல்லத்துடன் கலந்து , சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்து அந்தச் சாறை விழுங்கினால் சட்டென்று இருமல் நிற்கும்.
* இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய்யுடன் அரை மூடி அளவு எழுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதால் தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும். கடலை எண்ணெய்யை உணவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்துகிறோம். பாதாம் எண்ணெய்யை விட மிகுந்த சத்துக்கள் உடையது. உணவுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும். உஷ்ணத்தை தருவதுடன் தோலுக்கு பளபளப்பை கொடுக்கும். கடலை எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது.
*தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம், மிளகுப்பொடி கால் ஸ்பூன் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு வராது. எள்ளில் இருந்து கிடைக்க கூடியது நல்லெண்ணெய். இதை தலைக்கு தேய்த்து குளிப்பதால் பொடுகு இல்லாமல் போகும். கொழுப்பு சத்து நிறைந்தது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்கக் கூடியது. வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும்.
*நல்லெண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் பற்கள் ஆரோக்கியம் பெறும். கன்னம் பலம் அடையும். முக வசீகரம் ஏற்படும்.

Comments
Post a Comment