Skip to main content

உழைப்பும் பிழைப்பும்:


மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு காட்டில் வாழ்நாள் பூரா வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே என்னை மாதிரி ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.
நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.
அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுது.
புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, ஜாயின் செக்ரட்ரியா இரண்டு எலியை போட்டு ச்சு ... இரண்டு எலியும் திருடி திங்கரதுல கெட்டி ....
"ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்"னுது.
"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு.இந்த பூனை அதன் வேலையை செய்யாமல் மேல எலி திருடுவதை போட்டு கொடுத்துட்டு சும்மா தூங்குச்சி.
இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த என்னோட இல்லையில்லை அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை சுறுப்பாக வேலை வாங்க சூப்பர்வைசரா பன்றிய போட்டுச்சு. இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப சூப்பர்பன்றியும் உரும அன்றைய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி.
'எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. முதலீடு தேவை என ஐடியா கொடுத்துச்சு. ஒரு நாய் வச்சிருந்த வங்கியில் கடனை வாங்குச்சு. ஈத்து எட்டு குட்டி ச்சீ வட்டி வரலைனு அதுவும் குறைச்சிச்சு. பிறகு ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"
"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான" அதிரடியாக சொன்னது ஆந்தை.
எறும்பு போனபின் எல்லாமே தூங்குச்சி. புலி திவால் என கம்பெனிய மூடிட்டு வேற காட்டுக்கு ஓடிப்போச்சி.
சும்மா தின்ன நாய் நான் தான் இந்தகாட்டுக்கு ராஜா என காட்டை கைபற்றுச்சு.
தூங்கீட்டு இருந்த ஒவ்வென்னுக்கும் 8 குட்டி போட்டுதர உத்தரவு போட்டுச்சு.
என்ன செய்யறதுனு தெரியாமல் எல்லாமே காட்டை விட்டு ஒடிடுட்ச்சு.
யாரும் இல்லாத கம்பெனியில் செக்யூரிட்டியா நரியை நியமிச்ச நாயும் ஒடிப்போய் வட்டிதான் வரல குட்டியாவது போடலாம் என இருந்துச்சி...
இப்ப வந்த எறும்பு எனக்கு வேலை தெரியும் என்று சொல்லுச்சு.
நாய் முதலாளி பிசியா இருக்காரு போர்டை பாரு என சொல்லீடுச்சி.
இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...