Skip to main content

கணித சூத்திரம்

தச்சர்களுக்கு கணித சூத்திரம் புரியும்போதும் கலாரசனை அழகுணர்ச்சி எழுவது ஏன்?
அற்புதமான கலைப் படைப்புகளையும் இசையையும் நுகரும்போது ஒருவருக்கு மூளையில் ஏற்படும் அழகுணர்ச்சி, கணித சூத்திரங்களில் காணப்படும் வித்தியாசமான எண்களையும் எழுத்துக்களையும் காணும்போதுகூட கணித வல்லுநர்களுக்கு ஏற்படுகிறது .
சில சூத்திரங்களை மனிதர்கள் கண்ட நேரத்தில், அவற்றின் அழகால் ஈர்க்கப்பட்டு அவர்களது மூளையில் கலை ரசனைக்குரிய மின்னணு மாற்றங்கள் ஏற்படுகின்றது.
மனதில் ஏற்படும் அழகுணர்ச்சிக்கு நியூரோ பயாலஜிக்கல் நரம்பியல் அடிப்படை ஒன்று இருக்க வேண்டும் .
கணித சூத்திரங்களை ஒருவர் புரிதலுடன் பார்க்கும்போது அவருடைய மூளையின் பல்வேறு பாகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சில அதிசியதக்க சூத்திரங்களை பர்க்கும்போது அவர்களுடைய மூளையின் உணர்வுரீதியான பாகமான மீடியல் ஒர்பைடோ ஃபிரண்டல் கார்டெக்ஸ் ( Medial orbito frontal cortex) செயலூக்கம் அடைகிறதாம்.
ஒரு நல்ல இசையைக் கேட்கும்போது ஒரு அற்புதமான ஓவியத்தை பார்க்கும்போது எவ்வித மாற்றம் அடையுமோ அவ்விதத்தில் அது மாற்றம் அடைகிறதாம்.
கணிதம் மட்டுமல்ல இயற்பியலில் வரும் கணிதங்களும், ஃபார்முலாக்கள், தத்துவம் போன்றவற்றை படிக்கும் போதும் அழகுணர்ச்சி தோன்றுமாம்.
மனதிற்குப் பிடித்த இசையை கேட்கும் போதும், அழகான புத்தகங்களை வாசிக்கும் போதும் நமது மூளையில் அழகுணர்ச்சி ஏற்படுகிறது.
அதே போல கடினமான கணித சூத்திரங்களில் காணப்படும் வித்தியாசமான எண்களையும், எழுத்துக்களையும் காணும் கணித நேசிப்பாளர்களுக்கும், கணித வல்லுனர்களுக்கும் ஏற்படுகிறது என ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
தச்சனின் சுமைதாங்கி கதை பகிர்வு::::
ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.
போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதைத் தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்குப் போய்ச் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரைத் திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்குத் துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையைத் தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.
"என்னடா இது? காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முணுமுணுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.
முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானார்.
வண்டியைக் கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டிப் போய் விட்டது, இனி உன் வண்டியைப் பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.
போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.
தச்சர் வீடு வந்ததும், "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார்.
"வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.
தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார்.
முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையைப் பார்த்தவுடன், அந்தக் குழந்தையைத் தூக்கி அணைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியைப் பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகப்படுத்தி விட்டுத் தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.
காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார்.
தச்சர் எந்தவிதக் கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.
வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தைத் தொட்டுவிட்டுப் போனவுடன் காலையில் நடந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது?" என்றார்.
அதுவா முதலாளி, இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டுத்தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு போகக்கூடாது. ...
காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படிப் பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
காலையில் நான் போகும் போது, இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன். ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்" தச்சர் சொல்வதைக் கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.
தச்சரைப் பின்பற்றினால், நமக்கும் எந்தப் பிரச்சனையும் பெரிய பிரச்சனையாகப் போவதில்லை என முதலாளி நினைத்தவிட்டு சென்றாரம்.
தற்போது தற்சார்பு மரபு வழி வாழ்வியல் பயணியின் தேடல் மெக்காலேவின் வாசத்தில் புதைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது... தேடலில்...
நாளை எந்திரத்திற்கு அடிமையாகமா இல்லாமால் மீட்க வேண்டிய கலை மட்டும் கணித அறிவும் இதில் அடங்கும்.
வேளாண்மைக்கு தேவையான கட்டை வண்டி முதல் ஏர் வரை கார் வாங்குவது போல் வாங்கி அழகுக்காகவது வைப்போம்... தச்சர்களிடம் இருந்து செய்து .. முக்கியமாக.
தற்சார்பு அடையும் அனைவருக்குமே.. இது கிடைத்துவிடும் என்றால் நம் தமிழரும் கூட்டாக தற்சார்பாக மரபு வாழ்வியலை மீட்டால் தச்சரை போல் நிம்மதியாக வாழலாம் சரிதானே
மீள்

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...