Skip to main content

ஒரு குட்டி கதை:கௌதம புத்தர்

என் மனதை எளிதில் காயப்படுவதில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? உதாரணமாக எனக்கு நெருங்கியவர் என் தோற்றத்தை கிண்டல் செய்தாலோ, கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போனாலோ, உதாசீனப்படுத்தினாலோ தாங்கிக் கொள்ள இயலவில்லை.



ஒரு குட்டி கதை :-
கௌதம புத்தர் ஒவ்வொரு ஊராக சென்று அவரின் கருத்துக்கள், ஆலோசனைகள், மக்களை மேம்படுத்தும் வழிகள், மனதை அமைதி படவைக்கும் சொற்பொழிவுகள்…. " போன்றவற்றை போதித்து வந்தார். அச்சமயங்களில், அவ்வூரில் வாழும் மக்களின் வீட்டிற்கு சென்று உணவு வாங்கி உண்பதை அவரும், அவர் சீடர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு உணவு வழங்குவதை பெரும் பாக்கியமாகவே அனைத்து ஊர் மக்களும் கொண்டிருந்தனர்.

ஒரு மதிய வேளையில், புத்தர் உணவிற்காக அந்த ஊரில் உள்ள ஒரு வீட்டின் கதவை தட்டினார். அப்பொழுது அந்த வீட்டிலுள்ளவர்கள் வந்து "உணவை நாங்கள் எதற்கு உனக்கு வழங்க வேண்டும் ? உழைத்து உண்ணும் வழக்கம் இல்லையா ? … " என்று அவதூறாக பல வார்த்தைகளை கூறி காயப்படுத்தி அனுப்பிவிட்டனர். புத்தர் ஒரு புன்னகையுடன் அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதற்கு அடுத்த நாள், புத்தர் மீண்டும் அவ்வீட்டின் கதவை தட்டி உணவு கேட்டார். முந்தைய தினத்தை போலவே அவ்வீட்டார் இவரை அவதூறாக பேசி அனுப்பி விட்டார்கள். இம்முறையும் புத்தர் ஒரு புன்முறுவலுடன் அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினார்.
அந்த ஊர் மக்கள் புத்தரிடம் "உங்களை தெய்வமாக மதித்து உணவு படைக்க நாங்கள் இவ்வளவு பேர் போட்டி போட்டுக்கொண்டு உணவு வழங்குகிறோம். இருப்பினும், நீங்கள் ஏன் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று உணவு கேட்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமா ?" என்று கேட்டனர்.
புத்தர் " பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. அதை நீங்கள் கூடிய விரைவில் புரிந்து கொள்வீர்கள்" என்று கூறி புன்னகைத்தார்.
மூன்றாவது நாளும் புத்தர் மீண்டும் அதே வீட்டிற்கு சென்று உணவிற்காக கதவை தட்டினார். எப்பொழுதும் போல வீட்டார் புத்தரை காயப்படுத்தினார்கள், புத்தரும் புன்னகையுடன் திரும்பி சென்றுவிட்டார்.
இதேபோல் புத்தர் ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டிற்கு சென்று உணவு கேட்பதும், அந்த வீட்டில் உள்ளவர்கள் இவருக்கு உணவு வழங்காமல் திருப்பி அனுப்புவதும் வழக்கமாக இருந்தது.
இந்த தினசரி செயலால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கே பெரிய குழப்பம் வந்துவிட்டது. "நாம் இவ்வளவு காயப்படுத்தி அனுப்பியும் இவர் ஏன் நம் வீட்டிற்கு தினமும் வந்து உணவு கேட்கிறார் ? காரணத்தை நாம் புத்தரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்" என்று முடிவெடுத்தனர்.
அடுத்தநாள் எப்பொழுதும் போல புத்தர் அவர்கள் வீட்டிற்கு வந்தார். வழக்கத்திற்கு மாறாக அந்த வீட்டில் உள்ளவர்கள் புத்தருக்கு உணவு வழங்கினார்கள்.
அந்த வீட்டில் உள்ளவர்கள் புத்தரிடம் " உங்களை எவ்வளவு காயப்படுத்தினோம்; அவதூறாக பேசினோம்; உங்களை சற்றும் மதிக்கவில்லை; உங்கள் பசிக்கு உணவும் வழங்கவில்லை. இருப்பினும் நீங்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தினமும் இங்கே வருகிறீர்கள். எங்களைப் பார்த்து அன்புடன் புன்னகைக்கவும் செய்கிறீர்கள். அந்த சூழலில் உங்களால் எவ்வாறு புன்னகைக்க முடிகிறது ? தங்களுக்கு கோபமே வராதா ?. "
புத்தர் எதுவும் பேசாமல் அவர் கையில் இருந்த தட்டை அந்த வீட்டில் உள்ளவர்களிடம் நீட்டி அதை வாங்க சொன்னார். வீட்டில் இருந்தவர்களும் ஒன்றும் புரியாமல் அந்தத் தட்டை அவர் கையிலிருந்து வாங்கினார்கள்.
புத்தர் அந்த வீட்டில் உள்ளவர்களை பார்த்து "உங்கள் கையில் இப்பொழுது இருப்பது யாருடைய தட்டு ?"
வீட்டார் "உங்களுடையது."
புத்தர் " இந்த தட்டு உங்கள் கையில் எப்படி வந்தது ? "
வீட்டார் "நீங்கள் எங்களிடம் தந்தீர்கள், நாங்கள் அதை வாங்கிக்கொண்டோம். "
புத்தர் "அந்த தட்டை என்னிடம் இப்பொழுது திருப்பி தாருங்கள்" என்று கேட்டு தட்டை வாங்கிக் கொண்டார். " இப்பொழுது உங்கள் கையில் என்ன இருக்கிறது ?"
வீட்டினர் " ஒன்றுமே இல்லை. "
புத்தர் " அதேபோல்தான் நீங்கள் என்னிடம் கூறிய அவதூறு சொற்களும். நீங்கள் என்னிடம் அந்த சொற்களை நீட்டினீர்கள், ஆனால் அதை நான் பெற்றுக் கொள்ளவில்லை. அதை நான் வாங்கி, ஏற்றுக்கொண்டால் தானே அவை என்னிடம் இருக்கும் ? நான் அவற்றை ஏற்கவும் இல்லை வாங்கவும் இல்லை. எனவே நீங்கள் கூறிய எதுவும் என்னை பாதிக்கவில்லை. " என்று கூறி ஒரு புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினார்.
கதையின் கருத்து :
இதேபோலத்தான் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அவமானங்கள், துக்கங்கள், உதாசீனம், அவமரியாதைகள் போன்றவற்றை நாம் நிராகரித்து விட வேண்டும். ஒருவர் நமக்கு தரும் அவமரியாதையை நாம் பெற்றுக் கொண்டால் தானே அது நம்மிடம் வந்து சேரும் ?



Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...