Skip to main content

பனங்கிழங்கு

Image may contain: food
சிறார் கவிதை...
கடைத்தெருவில் பனங்கிழங்கு கட்டு கட்டாய்க் கிடக்குது - அதுகண்டவுடன் வாங்கச் சொல்லிக் கையைப் பிடித்து இழுக்குது.
காண்பதற்குச் சின்னக் கைத்தடி போல் இருக்குது - தங்கக்கம்பிகள் போல் வேர்கள் தலையில் எட்டிப் பார்த்து சிரிக்குது.
வாழைப்பட்டைச் சருகு போன்ற தோலுக்குள்ளே இருப்பது - உடல் வழுவழுப்பாய்ப் பளபளக்கும் #பளிங்கு போல அமைந்தது.
பாதியாகப் பிளக்கும்போது நாரை வாயைப் போன்றது - உட்பகுதியில்கால் நீட்டிக் குட்டிப் பனைமரமே தூங்குது.
#சர்க்கரை_நோய்க்காரருக்கு சத்துணவாய் இருப்பது - நன்கு சப்புக்கொட்டித் தின்பதற்கும் நல்ல சுவை உடையது.
சங்கடங்கள் ஏற்படுத்தும் #மலச்சிக்கலைத் தடுப்பது - நார்ச்சத்து இதனை விடவும் எதில் மிகுதியாகக் கிடைக்குது?
நீரிலிட்டு வேகவைத்து நெஞ்சம் மகிழ உண்ணலாம் - தணல் நெருப்பில் கூட சுட்டு எடுத்து நினைத்தபோது உண்ணலாம்.
வேகவைத்த கிழங்கை உதிர்த்துப் பாசிப்பருப்பும், வெல்லமும் - தேங்காயும் துருவித் தூவி ருசித்து சுவையில் உலகை மறக்கலாம்.
பனங்கிழங்கின் மாவைக்கூடப் பல வகையில் சமைக்கலாம் - அதில் பனை வெல்லத்தைக் கலந்து அடையும், தோசைகளும் வார்க்கலாம்.
பலவிதமாய் சுவை கொடுக்கும் #பனங்கிழங்கின் பயன்களை - இங்குபலரும் மறந்து வாழ்வதுதான் மிகப்பெரிய வேதனை.
வாயில் ருசித்து வயிற்றைக் கெடுக்கும் தின்பண்டங்கள் பெருகுது - நம்வாயும், வயிறும் சேர்ந்து வாழ்த்தும் பனை உணவோ மறையுது..
ஊரைக் கெடுக்கும் உணவுப் பொருட்கள் கடைகளிளெல்லாம் தொங்குது - நல்ல
உணவும், மருந்தும் ஆன பொருள் மறக்கப்பட்டுப் போகுது..
கேளுங்கள் - இன்றுதயங்காமல் வீட்டில் கேட்டுப் பனங்கிழங்கை வாங்குங்கள்.
#வெள்ளைக்காரன் இதனைக் கொண்டு விதவிதமாய்த் தீனிகள் - செய்துவிற்பனைக்கு நம்மிடமே அனுப்பும் முன்பே உணருங்கள்...!!!
பனையை காப்போம்...!!!
ஆரோக்கியத்தினை பெருக்குவோம்..!!!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem