முல்லா… முல்லா என்று ஒரே ஒருவர் இருந்தாராம். அவரிடம் அவர் பாசமாக வளர்த்த குதிரை ஒன்றும் இருந்ததாம். ஒருமுறை குதிரையை அழைத்துக் கொண்டு வெளியூர் புறப்பட்டாராம்.குதிரையின் கழுத்தில் இருந்த கையிற்றை பிடித்தவாறே நடந்து சென்றாராம். சிறிது தூரம் சென்றதும் சிலர் பேசியதை கேட்க நேர்ந்தது “குதிரைய வச்சிக்கிட்டு நடந்து போறான். குதிரை மேல் ஏறி உட்கார்ந்து போனால் சீக்கிரம் போலாம். இவனை மாதிரி முட்டாளை நான் பார்த்ததேயில்லை” என்று பேசிக்கொண்டார்கள்.“அவங்க சொல்றதும் சரி தான்” என்று யோசித்த முல்லா குதிரை மேல் ஏறி அமர்ந்து பயணத்தை தொடர்ந்தார். இன்னும் சிறிது தூரம் சென்றதும் வேறு சிலர் பேசியதை கேட்க நேர்ந்தது “பாவம்! அந்த வாயில்லா ஜீவன் மேல ஏறி உக்கார்ந்து ஜம்முனு போறான் பாரு. கொஞ்சம் கூட கருணையே இல்லாதவன்” என்று திட்டினார்கள்.“என்னடா இது? குதிரையோடு நடந்தாலும் ஏதாவது சொல்கிறார்கள். குதிரை மேல் ஏறினாலும் ஏதாவது சொல்கிறார்கள்.” என்று யோசித்த முல்லாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அப்படியே குதிரையை தூக்கி தோள் மீது வைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்.இன்னும் சிறிது தூரம் சென்றதும், “இங்க பாருடா இந்த முட்டாளை. ஒன்னு குதிரைய இழுத்துட்டு போணும். இல்லை குதிரையை ஓட்டிட்டு போணும். இவன் என்னடான்னா குதிரையை தூக்கிட்டு போறானே” என்று கை கொட்டி சிரித்தனராம்.
இதைத் தானே டா முல்லா முதல்லையே பண்ணாரு?!!?!?!
Comments
Post a Comment