Skip to main content

முத்து நகர் எக்ஸ்பிரஸ்

 

 

 

 

தூத்துக்குடியில் இருந்து

சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில் பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார். கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள்.

பேராண்டி நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிகாலை 2 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம்.

நான் தூங்கி விடுவேன் என்னை விழுப்புரத்தில் 2.00 மணிக்கு எழுப்பி இறக்கி விட்டு விடு.

நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு.

நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன். சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்து விடு என்றாள்.

அவன் சொன்னான் பாட்டி இதென்ன உதவி கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் என்றான். பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.

காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி குய்யோ முறையோ என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள். நீ நல்லா இருப்பியா நாசமா போயிருவ. உன்னை நம்பி தானடா நான் தூங்கி விட்டேன் முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேன் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி இருப்பேனே இப்போதே மணி ஏழாகி விட்டதே இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன் முகூர்த்தம் முடிந்து விடுமே என்று திட்டிக் கொண்டே இருந்தாள்.

பக்கத்திலிருந்தவர்கள் விசயத்தைக் கேள்விப் பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி சாத்து சாத்து என்று சாத்தினார்கள்.

அவன் இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் கேட்டார்கள் ஏண்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டும் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறோம் நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 2.00 மணிக்கு தர தரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே அந்த பாட்டி எப்படி திட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்...😂😂😂

படித்ததில் சிரித்தது...!!!

 

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem