Skip to main content

ஒரு புலி கல்யாணம்

 

 

 

 

 

படிச்சேன் விழுந்து விழுந்து சிரிச்சேன் உடனே ஷேர் பண்ணிட்டேன் 😂😂😂

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......

எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.

மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிக்கிட்ட போய்ட்டு கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.

புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட,

"டேய் இத்தனைப் பேரு என்னய தூரம நின்னு வாழ்த்திட்டு போறானுங்க.....

ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே !

நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு ! 😂😂😂

கதையின் நீதி:

புலியை கூட பூனையாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள் 😜😝😜



Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem