Skip to main content

Diogenes பத்தி கேள்விபட்ட Alexander

 

புலிகேசி அரசர்களும், சங்கிலி மாயன்களும், நிற்காத சுரண்டலும்.
கி மு 300 வாக்கில்…
Diogenes பத்தி கேள்விபட்ட Alexander அவரை பாக்க விரும்பினார்.
Alex: Plato ஜி ஆள் அனுப்பறேன், அவரை அரண்மனைக்கு வர சொல்லுங்க. அவர் கிட்ட கொஞ்சம் பேசனும்..
Plato: அந்த திமிர் புடிச்சவன் வர மாட்டான், நீயே போய் பாரு ராசா, அவன் எதாச்சும் தொட்டில தூங்கிகிட்டு இருப்பான்…எனக்கும் அவனுக்கும் எப்பவுமே ஏழரை தான்.
Alex: OK ji.
கடற்கரையில், கோவணத்துடன் குளிர் காய்ந்து கொண்டிருந்த Diogenes கிட்ட
Alex: நான் அரசன் வந்திருக்கேன், உங்க கிட்ட பேசனும்…
Diog: முதல்ல ஓரமா நில்லு, வெயில மறைக்காத…குளிர் காயறத விட உன்னோட வெட்டி நாயம் பெருசில்ல…
Alex ( ஓரமா போய்) : ஆமா, இங்க என்ன ஒரே எலும்பு குவியலா இருக்குது…
Diog: இந்த கடற்கரை ஓரம் ஒரு பெரிய சுடுகாடு இருந்துச்சு. பெரிய புயல்ல அது கடல் கொண்டு போயிருச்சு, இப்ப கடல் எலும்பு மட்டும் திருப்பி கொண்டாந்துருச்சு
அந்த எலும்பு குவியல்ல என்ன தேடறிங்க…
Diog: உங்கப்பன் Philip the great சமாதி கூட இங்க தான் இருந்துச்சு. அவனோட எலும்பு எங்கனு தேடறேன் ஆனா எல்லாமே அடிமையோட எலும்பு போலயே இருக்குது, அரசனோட எலும்பு எதுனு கண்டுபுடிக்க முடியல..
Alex கடுப்பாகி….: நான் இந்த நாட்டு மன்னன். எதோ நல்ல விசயம் பேசலாம்னு வந்தேன்…
Diog: இருந்துட்டு போ… உன்னோட எலும்பும் நாளைக்கு இங்க தான் ஒதுங்கும். அதையும் எவனாலயும் கண்டுபுடிக்க முடியாது. உங்கிட்ட பேசற அளவுக்கு எனக்கு நேரமில்ல..சீக்கிரம் சொல்லி தொல…
Alex: அப்படி என்ன பெரிய வேலை? மன்னனே இங்க வந்து பேசறேன்…உங்க வேலைய முடிக்க நான் ஆள் அனுப்பறேன்
Diog: தெனமும் இந்த சந்தைல பகல் நேரத்துல எரியற விளக்க தூக்கிகிட்டு சுத்தறேன், அவன மட்டும் கண்டுபுடிக்க முடியல..
Alex: யார் அவன்? எதிரி நாட்டு ஒற்றனா இல்ல திருடனா? இப்பவே ஆள் அனுப்பறேன்…ஆமா பகல்ல எதுக்கு விளக்கு..
Diog: என் கண்ணுக்கு தெரிய மாட்டேங்கறான்…அதான் விளக்கு வெச்சு தேடறேன்.
Alex: யார் தான்யா அவன்….
Diog: ஒரு நேர்மையான மனுசன தேடறேன்…இது வரைக்கும் கண்ணுல படல…இந்த சந்தைல ஒருத்தன் கூட இல்ல.நீ வேணும்னா உன்னோட ஆளுங்கள விட்டு தேடி குடேன்…
Alex: யோவ்….உங்கிட்ட பேச வேண்டாம்னு பிளேட்டோ ஜி சொன்னார்…நாந்தான் ஆர்வ கோளாறுல வந்து சிக்கிகிட்டேன்…
என்னோட பெரும் வேலைகளுக்கு நடுவுல உங்க கிட்ட பேச வந்த என்ன…
Diog: அப்படி என்ன வேலை…
Alex: நான் பெர்சியா, இந்தியா மேல படை எடுக்க போறேன்.
Diog: எடுத்து?
Alex: உலகத்தை ஆளுவேன்..
Diog: ஆண்டு?
Alex: அப்புறம் ரிடையர் ஆகி உங்கள போல கடற்கரைல ஓய்வெடுப்பேன் …
Diog: ஓய்வெடுக்க படை எதுக்கு? இப்படி வந்து உட்காரு, ரெண்டு பேரும் சேந்து இப்பவே ஓய்வெடுப்போம்…
Plato mind voice: அவன் நம்பாத…
Alex: நான் படை எடுக்க தான் போறேன்…அப்ப தான என்னோட புகழ் உலகம் முழுக்க பரவும்? நாடு செழிக்கும்?
Diog: இப்படி தான் உங்கப்பனும் கிளம்பினான்..கடைசில அவனோட எலும்பு அடிமைகளோட எலும்போட ஒன்னா கிடக்குது.
எகிப்து மன்னன் ராம்செஸ் பெரிய சிலையா தன்னோட உருவத்த வடிச்சான்..அந்த சிலை கை வேற கால் வேறயா பாலைவன மணல்ல புதைஞ்சு கிடக்குது…
இருக்கறப்பவே வாழ நல்ல விதமாக வாழ முடியல…ஆமா நீ பெர்சியா மேல படை எடுத்தா கிரேக்கம் எப்படி செழிக்கும்?
Alex: அந்த நாட்டு வளத்த எல்லாம் இங்க கொண்டாருவமே….
அப்புறம் என்ன..கிரேக்கம் வல்லரசு தான்..நல்லரசு தான்.
Diog: அதாவது அடுத்தவன் பொருள திருட தான் இந்த படையெடுப்பு…இந்த திருட்டுனால உனக்கு புகழ் சேரனும்…அதாவது ஒரு திருடனா நீ அறியபடனும்..
Alex: அது வந்து…பிளேட்டோ ஜீ என்ன கொழப்பறார் இவரு…
Diog: எல்லாம் அந்த Plato பய வேலை…அவனை உதைக்கனும். அவனோட அடிமை கல்வி தான உன்ன இப்படி அடுத்தவன அடிமையா வெச்சு இருக்க சொல்லுது, அடுத்தவன் பொருள ஆசை பட சொல்லுது?
Alex: என்ன பண்ண…இப்ப இந்த வாழ்க்கை முறைல சிக்கிட்டேன். அடுத்த பிறவியில் Diogenes ஆக நான் பிறந்து வாழனும்..
Diog: எனக்கு இந்த பிறவில கூட உன்னை போல வாழ விருப்பமில்லை. அடுத்த பிறவியிலும் நான் தானாகவே வாழ விருப்பம்…
இந்த பிறவில கூட உன்னோட ஆசைகள துறக்க முடியாத நீ தெரியாத அடுத்த பிறவில என்னை போல ஆகனும்னு சொல்லி யார ஏமாத்தற…
Plato: இந்த கிறுக்கன் உன்ன இங்கயே இருக்க வெச்சுருவான்…இவன் பேச்ச கேட்டா வளர்ச்சி எங்க இருக்கும்? போர் செஞ்சு பத்தாயிரம் செத்தாலும், நீயே செத்தாலும் நம்ம நாடு வளரனும்.
Diog: பிளேட்டோ நீயும் உன்னோட சீடர்களும் எந்த படைபிரிவில் சேர்ந்து இருக்கிங்க? எப்ப பெர்சியா பயணம்?
Plato: யோவ்…நாங்க போர் செய்ய படைக்கபட்டவங்க இல்ல…படிக்கறதுக்கும், எழுதறதுக்கும், அறிவுரை சொல்றதுக்கும் மட்டுமே படைக்கபட்டவங்க…
Diog: அட ஏட்டு சுரைக்காயா…அப்ப நீ தான இந்த நாட்ட ஆளற…யோவ் அலெக்சு…நீ ஒரு டம்மி பீசுயா…
Alex: நான் டம்மி பீசா.. நான் அரசன்.
Diog: ஆமா..நீ தான்…பெர்சியா, இந்திய நாடுகளை பத்தி சொன்னது யாரு?
Alex: நம்ம குருஜி தான்….அவங்களோட செழிப்ப பத்தி சொன்னதும் அவர் தான்.
Diog: நல்லத படிக்க சொல்லி குடுப்பான்னு பாத்தா உனக்கு பேராசை, பொறாமைனு சொல்லியே வளத்து இருக்கான் இந்த சங்கிலி மாயன்…
Alex: யார் சங்கிலி மாயன்?
Diog: நீ புலிகேசினா அவன் ராசகுரு சங்கிலி மாயன் தான…
Alex: என்னது…அரசனை கேவலபடுத்தறியா..உன்ன..
Diog: இங்க பாரு அலெக்சு….நானே காலைல பொழுது போகலனு குளிர் காயறேன்…நீயும் வா…கடலோட அழக ரசிக்கலாம், மீன் பிடிச்சு திங்கலாம், விண் மீன் அடில தூங்கலாம். நல்ல பொண்ணா கெடச்சா காலம் முழுக்க அவ கூடவே மகிழ்ச்சியா இருக்கலாம்…இல்லனா படை எடு, சாவடி, செத்து போ…
Alex: என்னோட புகழ் என்னிக்கும் நிலைச்சு இருக்கற மாதிரி செஞ்சிட்டு தான் ஓய்வேன்
Diog: நான் எதுவுமே செய்யாமயே என் பேர பல ஆயிரம் வருசம் கழிச்சு பேசுவாங்க. ஆனா அது எனக்கு மகிழ்ச்சியும் இல்ல கவலையும் இல்ல…
Plato: அரசே நேரமாகுது..நல்ல நேரத்துல் படைய நகர்த்தனும்..
Diog: நாலு பேர கொல்றதுக்கு நல்ல நேரம் வேற…நல்லா பண்றிங்க ஜீ.
பாவம் தீ கடவுளான Prometheus…இவர்களுக்கு போய் அறிவை குடுத்தமேனு ஒரே பீலிங்ல இருக்காராம்
Plato: ஏன்?
Diog: கடவுள் கொடுத்த மிக சிறந்த வரங்களை எல்லாம் உங்க பேராசைக்காக பயன்படுத்தி புவிய நாசம் பண்றிங்களே…அதனால தான். அப்புறம் சிந்து நதிக்கு கிழக்க நம்ம பிளாட்டோ ஜீ கும்பல விட படு மோசமான கும்பல் இருக்குது
 
Prakash Thangavel /FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...