இரண்டாம் உலகப் போரின் போது 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர்,
ஜோ ஓ டோனல் என்பவர் எடுத்த புகைப்படம்.
ஒரு
ஜப்பானிய சிறுவன் ஒரு தகனம் / அடக்கம் செய்யும் இடத்தில், இறந்த தனது
சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறான். அழக்கூடாது என்ற
வைராக்கியத்துடன் கண்ணீரைக் கட்டுப்படுத்த தனது உதடுகளைக் கடினமாகக்
கடித்ததால் வழியும் இரத்தம் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது.
“நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு”என்று காவலர் கேட்டபோது,
“சுமப்பதற்கு
கடினமாக உணர இது சரக்கு அல்ல, என் சகோதரன்” என்று சிறுவன் பதில் அளித்ததாக
புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார்.
இன்றைக்கும் ஜப்பானில், இந்த புகைப்படம் வலிமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறதாம்.
ஆம், எதை சுமக்குறோம் என்பதல்ல; அதை எவ்வாறு உணர்கிறோம் என்பது முக்கியம்.
பணம் காசுகளுக்காக உறவினரை ஏமாற்றும், உடன் பிறந்தவரை துண்டிக்கும்
இன்றைய தலைமுறைக்கும் இதில்... பாடம் இருக்கிறது.
Comments
Post a Comment