Skip to main content

பெற்றோரிடம் கற்றபடியே

 

 

😜😜மகன்: அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '
அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான்
மகன் : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..?
63 ன்னு சொன்னேன் ..
அப்பா : சரி அப்புறம்...
மகன்: 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..
அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ?
மகன் : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "
அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் "
அடுத்த நாள்,
மகன்: அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"
அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்..
மகன் : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு..
அப்பா : எதுக்குடா ?
"மகன் : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்..
ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..
அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .
அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்?.. சரி நீ என்ன பண்ணுன..?
மகன் : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படிடா நிக்க முடியும் லூசாடா நீன்னுதான் சொன்னேன்.. உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..
அப்பா : சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "
அதற்குஅடுத்த நாள்,
மகன் : இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா "
"அப்பா : இல்லடா நாளைக்கு வரேன் "
" மகன் : நீ போக வேணாம் பா "
"அப்பா : ஏண்டா?"
மகன்: ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க "
அப்பா : ஏண்டா..? என்னாச்சுடா?"
மகன் : ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் .. அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க "
அப்பா : சயின்ஸ் டீச்சரா ..!! அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான் ?"
மகன் : அதைத்தான் பா நானும் கேட்டேன் .
டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க "
😂😂😂😜
*பெற்றோரிடம் கற்றபடியே பிள்ளைகளும் வளர்கிறார்கள்*
*பெற்றோரிடம் கேட்டதையே பிள்ளைகளும் பேசுகிறார்கள்*

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem