தபு சங்கரின் வரிகளோடே முடிக்கிறேன்.
அப்பா நீங்கள் கடைசியாக
எப்பொழுது என்னை அடித்தீர்
என்பது எனக்கு நினைவில்லை
எனக்கு தான் தெரியவில்லை
என்றாலும் உங்களுக்காவது
தெரிந்திருக்க கூடாதா?
இது தான் நாம் இவனை
அடிக்கும் கடைசி அடி என்பது?
நீங்கள் என்று என்னை
அடிப்பதை நிறுத்தினீர்களோ
அன்றே என்னை மட்டும்
தனியே நடந்து போக
சொல்லிவிட்டு நின்றுவிட்டீர்கள்
வாழ்க்கை அடித்த அடியின்
வலி தாங்காமல் திரும்பி பார்க்கையில்
மருந்திட முடியாத தொலைவில்
நின்று கொண்டிருந்தீர்கள்.
https://qr.ae/pGw8IU
Comments
Post a Comment