Skip to main content

சண்டை வந்திடுச்சு

 

 

சண்டை வந்திடுச்சு

படித்ததில் சிரித்தது 😁😁

01. அக்கடான்னு சோபாவிலே டிவி முன்னாலே உட்கார்ந்து கிட்டு இருந்தேன். பொஞ்சாதி வந்து பக்கத்துல உக்காந்தா;

டிவி ல என்ன இருக்கு? ன்னு கேட்டா

ஒரே தூசியா இருக்குன்னு சொன்னேன்

சண்டை வந்திடுச்சு.

02. நேத்து ராத்திரி எதாவது விலை அதிகம் உள்ள இடத்துக்கு கூட்டிகிட்டுப் போங்கன்னு பொஞ்சாதி கேட்டா ?

நான் உடனே அடுத்த ரோட்டிலே இருக்கிற பெட்ரோல் பங்குக்கு கூட்டிக்கிட்டுப் போனேன்.

சண்டை வந்திடுச்சு.

03. நம்ம திருமணநாளுக்கு எங்க போகலாம்னு பொஞ்சாதி கிட்டே கேட்டேன்.

ரொம்ப நாளா நாம போகாத இடத்துக்கு போவோம்னு சொன்னா

நான் உடனே எங்கம்மா ஊட்டுக்கு கூட்டிக்கிட்டு போனேன்

சண்டை வந்திடுச்சு

04. இந்த வருட திருமண நாளுக்கு உனக்கு ஒரு பரிசு தரப்போறேன். என்ன வேணும்னு சொல்லுன்னு கேட்டேன்.

மூணு செகண்ட்ல 0 லிருந்து 100 வரைக்கு வர மாதிரி வித்தியாசாமான பொருளாக கொடுங்கன்னு சொன்னா

நான் ஒரு வெயிட் பார்க்கிற மெஷின் வாங்கிக் கொடுத்தேன்

சண்டை வந்திடுச்சு

05. இன்னைக்கி காலைலே கண்ணாடி முன்னாலே நின்னுகிட்டு இருந்தவ -

'எனக்கே என்னைப் பார்த்தா பிடிக்கல. வயசானவ மாதிரி தெரியுது; குண்டான மாதிரியும் தெரியுது; முகம் வீங்கிப் போன மாதிரி தெரியுது" அப்படின்னு புலம்பிக்கிட்டு, "உங்களுக்கு எப்படி தெரியுது?ன்னு என்கிட்டே கேட்டா.

"உனக்கு கண் எந்தப் பிரச்சினையும் இல்லாம தெளிவாத் தெரியுது'ன்னு சொன்னேன்.

சண்டை வந்திடுச்சு.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem