Skip to main content

ரெண்டு ரூபாய் நோட்டு...நடிகர் மம்மூட்டி

 

 ரெண்டு ரூபாய் நோட்டு...

அகில இந்திய ஸ்டார் நடிகராக இருந்தாலும் துளிக் கூட பந்தா இல்லாத, மைக்கில் அட்வைஸ் பண்ணாத, நடிகர் மம்மூட்டி அவர்களின் மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் என்ற நூலிலிருந்து...

ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி புறப்பட்டேன். புறப்பட்ட அடுத்த அரை மணிக்கெல்லாம் நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வண்டி.

அது பனிப் படர்ந்த இரவின் தொடக்கமாய் இருக்கும் நேரம். அமைதியாய் என் காரில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன்.
அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம்.. பார்க்க ஒடிசலான வயசான கிழவன்.. கையில் கை விளக்குடன் தலையில் முக்காடுடன்..
கை நீட்டி வழிமறித்தான். இந்த ராத்திரி வேளையில் யாரென்னவென தெரியாமல் வண்டியை நிறுத்தி மாட்டிக் கொள்வானேன் என வண்டியை நிறுத்தாமல் போனேன்.

ஒரு அரை கிலோமீட்டர் போயிருப்பேன். ஆனால் அந்தக் கிழவனின் கண்ணில் தெரிந்த தவிப்பும் கவலையும் ஒரு கணம் என்னை யோசிக்க வைக்க, வண்டியைத் திருப்பி மீண்டும் அந்தப் பகுதியை அடைந்தேன்.

அந்தக் கிழவன் அங்கேயே நின்றிருந்தார். எங்கய்யா போகணும்..? என்றேன்.

'இல்லைய்யா.. என் பேத்திக்கு வவுத்து வலி நெறமாச கர்ப்பிணி.. ரொம்ப நேரமா நிக்கிறேன்.. வண்டியே வரலைய்யா...' என்கிறார்.

'சரி.. ஏறுங்க..' எனச் சொல்லி இருவரையும் ஏத்திக் கொண்டு ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு விரைகிறேன்.

இன்னுமா நாம யாரு னு இவருக்குத் தெரியல என்ற யோசனை எனக்குள். ஒரு வேளை பேத்தி பற்றியக் கவலையிலும் இந்த இருளிலும் நம்மை அவருக்கு அடையாளம் தெரியாது போயிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். அந்தப் பெண் கிட்டத்தட்ட மயக்கமுற்ற நிலையிலிருந்தாள்.

மருத்துவமனை அடைந்ததும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குள்ளே விரைந்தனர். அப்போது நான் காரை விட்டு இறங்காததால் செவிலியர்களும் என்னைக் கவனிக்கவில்லை.

பிறகு அந்தக் கிழவன் 'ரொம்ப நன்றிய்யா.. அவசரத்துக்கு உதவின.. இந்தா, இத டீ செலவுக்கு வச்சிக்க...' என என் கையிலொரு நோட்டைத் திணித்தார். அந்த ஓட்டை ஒடிசலான எந்தக் கடையிலும் சிங்கள் டீ கூட குடிக்க முடியாத செல்லாத ரெண்டு ரூபாய் நோட்டைப் பார்த்து விட்டு அவரை ஒரு முறை மீண்டும் பார்க்க.. அவரோ 'சும்மா வச்சுக்கய்யா..' என்றபடி மருத்துவமனைக்குள் போய் சட்டென மறைந்து விட்டார்.

ஆம்..நானும் எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது.

நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.

Comments

  1. The Best Baccarat Sites in Ireland for 2021 | WORRione
    Betway is a popular UK-based betting site that was หาเงินออนไลน์ established in 2006. The company was established in 2006 by Richard Branson, 바카라사이트 CEO. The Irish worrione

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...