Skip to main content

காமராஜரின் ஆட்சி

 

 

ஒரு காலத்தில் சட்டசபை, எம்எல்ஏ ஹாஸ்டலில் படிப்பறிவில்லாதவரக்ள் பியூனாக பணிபுரிந்து வந்தார்கள்.

"இவர்களுக்கு சட்டசபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்த தெரியவில்லை. வெறுமனே கும்பிட்டு, கை கட்டி வாய் பொத்தி நிற்பதோடு சரி. சட்டசபை மூத்த அலுவலர்களை பக்குவமாக வணங்கி செல்வதில்லை" … இப்படி பல குற்றசாட்டுகள்.

அப்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி. முதலமைச்சரிடம் இந்த விஷயம் போனது.

'குறைந்த பட்ச படிப்பு அரசு பணிக்கு அவசியம்தான்' என்று நினைத்தார் காமராஜர்.

'எட்டாவது வரை படித்திருந்தால் மட்டுமே பியூன் ஆக இருக்க முடியும். குறிப்பிட்ட காலம் வரை வாய்ப்பு கொடுத்து, தேறமுடியாதவர்கள் தொடர்ந்து பணியாற்ற தடைவிதித்து' ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

எம்எல்ஏ ஹாஸ்டலில் சிங்காரம் என்ற ஒரு பியூன், முதியவர் இருந்தார். நாலாவதுவரை தான் படித்திருந்தார்.

மூக்கையா தேவர் எம் எல் ஏ-விடம் போய் "இந்த வயதில் என்னால் இதற்குமேல் படிங்க முடியாது. அவ்வளவு தான் என் தகுதி.

என்னை திடீரென்று வீட்டுக்குப் போகச் சொன்னால், நான் என்ன செய்வது.. பெண் குழந்தைகள் வேறு இருக்கிறது" என்று வேதனையுடன் கூறினார்.

மூக்கையா தேவர் "பரவாயில்லை, நமது முதலமைச்சரதான் உனக்கு தெரியுமே.. யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்று தானே எம்எல்ஏ ஹாஸ்டலில் ஒரு போன் நம்பர் எழுதி வைத்திருக்கிறார்…

போன் செய்து உன் குறைகளை சொல். ஒரு ஐஏஎஸ் ஆபீஸர் போன் எடுப்பார், கண்டிப்பாக உன் விஷயத்தை முதலமைச்சரிடம் கூறி விடுவார்" என்று கூறினார்.

சிங்காரம் மன தைரியத்தை திரட்டி, வாளகத்தில் வைத்திருந்த பொது தொலைபேசியை எடுத்தார்..

"ஐயா நான் சிங்காரம் பேசுறேன்"

எதிர்முனையில் "சிங்காரம் என்றால்? யாரப்பா நீ" என்று பதில் கேள்வி..

" எம்எல்ஏ ஹாஸ்டலில் பியூனாக வேலை செய்கிறேனுங்க"

" என்னப்பா வேணும்"

"என்னங்கய்யா, இதுபோல படிக்காதவர்கள் எல்லாம் திடீரென வேலையை விட்டு போகச் சொன்னால் நாங்க எங்கே போறது?"

" ஏன்? எடுத்தா என்ன? அரசுக்கு அந்த அதிகாரம் இல்லையா" என்று திருப்பி கேள்வி.

சிங்காரம் விடாமல் "ஐயா நான் தெரியாமல் கேட்கிறேன், நம்ப ஐயா, முதலமைச்சரே நாலாவது, ஐந்தாவது தான் படித்திருக்கிறார். அவருக்கு பியூனாக இருக்கும் மற்றவர் மட்டும் எட்டாவது படித்து இருக்கணும் என்று சொன்னால் எப்படி சரியாகும்"

"நீ எங்கிருந்து பேசுகிறாய்"

சிங்காரம்"நான் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து பேசுகிறேன்"

"சரி போன வை" என்று பதில்.

அடுத்த 15 நிமிடங்களில் ஒரு ஜீப் வந்தது..

"முதலமைச்சர் உன்னை கூப்பிடுகிறார்" என்று இவரை கூட்டிக் கொண்டு சென்றார்கள். இவருக்கு வெலவெலத்து விட்டது….

ஏனென்றால் போன் அட்டென்ட் செய்ததே காமராஜர்தான்!

முதலமைச்சர் காமராஜர் அறைக்கு சென்றால் அங்கே காமராஜர், சட்டசபை செயலர், தலைமை செயலர், சபாநாயகர் அனைவரும் இருந்தார்கள்.

காமராஜர் இவரை சோபாவில் உட்கார சொன்னார்

தயங்கி அமர்ந்த சிங்காரத்திடம் "போன்ல என்னப்பா சொன்ன" என்று கேட்டார்.

சிங்காரம் முகம் வெளுத்து போய், தயங்கியபடி, "அது ஒன்னுமில்ல ஐயா, இப்படி திடுதிப்பென்று வேலையில் இருந்து வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள், எட்டாவது படித்து இருந்தால் தான் பியூனாக முடியும் என்று சொல்கிறார்கள், அதுதான் போன் செய்தேன்" என்று கூறினார்.

காமராஜரும், "முழுசா என்ன சொன்ன சொல்லு? என்கிறார்.

இவரும் தயங்கியபடி… "அது இல்ல ஐயா… நம்ம முதலமைச்சரே நாலாவது அஞ்சாவது தான் படித்திருக்கிறார்… நாங்க மட்டும் எதுக்குயா எட்டாவது பாஸ் பண்ணனும் என்று கேட்டேன்" என்கிறார்.

வெடி சிரிப்பு சிரித்தார் காமராஜர்.

தலைமை செயலரை அழைத்து "அந்த ஜி ஓ வில் பியூன் வேலைக்கு சேருபவர்கள் எட்டாவதுக்கு மேல் படித்திருக்க வேண்டும்" என்ற வரியை "இனிமேல்" பியூன் வேலைக்கு சேருபவர்கள்" என்று மாற்றுங்கள். இப்போது இருப்பவர்கள் அப்படியே இருக்கலாம் என்று ஆணை இருக்கட்டும்" என்றார்.

சிங்காரம், தழுதழுக்க "ஐயா படிக்காதவன் என்கிறத காட்டிப்புட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க" என்று வழுகி தரையில் அமர்ந்தார்.

"எந்திரின்னேன் ! முதமைச்சர்ன்னா தப்பு செய்யமாட்டாரா? யார் சொன்னாலும் சரி பண்ணிக்கணும்ன்னேன்" என்று எழுந்து உள்ளே சென்று விட்டார் காமராஜர்.



Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...