ரம்மியமான ரசனை வேண்டும்
அழகியல் அலசல் வேண்டும்
இனிமையான இயல்பு வேண்டும்
ஆரோக்கியமான ஆற்றல் வேண்டும்
உயர்வான உழைப்பு வேண்டும்
ஏற்றமுடைய ஏகாந்தம் வேண்டும்
எழில்மிகு எழுச்சி வேண்டும்
ஈர்க்கும் ஈகை வேண்டும்
மரியாதையான மனது வேண்டும்
மெய்சிலிர்க்கும் மெல்லிதயம் வேண்டும்
பளிச்சிடும் பதில்தெரிய வேண்டும்
ஊக்கம்தரும் ஊழ்வினை வேண்டும்
தாய்மையான தானம் வேண்டும்
தீஞ்சுவை தீர்க்கரிவு வேண்டும்
பெண்மனமறிந்த பெருமை வேண்டும்
பேசும் பேச்சுசுவை வேண்டும்
சொல்லாமொழிகள் சொல்ல வேண்டும்
மதியே மருந்தாக வேண்டும்
யோகமும் யோசிக்க வேண்டும்
நகைச்சுவையும் நகையாக வேண்டும்
சொற்றொடர்களில் சொக்குமழகு வேண்டும்
ஆயிரத்திலொருவராக ஆட்கொள்ள வேண்டும்
என்றும் என்றென்றும் பல ரசிகர் ரசிகைகளுள்
ஒருத்தி 💐🙏
Comments
Post a Comment