Skip to main content

படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்தது.
................. ....... ..

அண்ணே அடுத்தமாதம் +2 ரிசல்ட் வருது. அதுக்கு என்னடா தம்பி?

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே..?

மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடா..!

அண்ணே டாக்டருக்கு படிக்கவா.?

டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான் கொடுக்கத்தெரியும், ஆனா செய்யமாட்டிங்க, வேற சொல்லு..!

அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா.? இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுங்கடா..!

அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே..? ஏன்டா? ஏன்? நான் படுற பாடு போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு கெடைக்காதுடா..!

அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா.? எதுக்கு. ? மலேசியா பிளேன பாத்தல்ல..?!?

அப்போ மரைன் ஓகேவா.? வேணாம்டா உனக்கு தண்ணியில கண்டம், நீச்சல் வேற தெரியாது..!

பேசாம ராணுவத்துக்கு போகட்டுமாணே.? அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டடா..!

போலீசு வேலைக்காவது ட்ரை பன்னவாணே.?

லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள போலீசு கூட போன்ல "ஒன்னு குடுக்கட்டுமா?னு" கேப்ப, வெளுத்துபுடுவேன் ராஸ்கல்..!

அப்போ ஏதாவது டிகிரியவாது முடிக்கவாணே.? சத்தியமா வேலை கிடைக்காதுடா,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு கோடி பேரு கெடக்கான்..!

கேட்ரிங் ஓகேவா.?

சமையல் செய்றதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் நீயே கத்துப்படா , ஸோ வேஸ்ட்..!

ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ் பன்னட்டுமா.? ஊர்துட்ட திங்க அலையாதடா, அது நல்லது இல்ல..!

ஏதாவது யாவாரம் பன்ன கடைய ஆரமிக்கட்டுமா.?

இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த இடத்தில யாவாரம் பண்ணி திங்கலாம்னு பார்க்கிரியாடா, "குண்டக்கா மண்டக்கா" திட்டீருவேன்..!

டீக்கடைய போடட்டுமா.? பிரதமர் ஆகி நாடு நாடா சுத்திகிட்டும், முதல்வர் போல டம்மியா இருக்கலாம்னு பார்க்கிரியாடா, "தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ"..!

வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கட்டுமா.?

அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய் நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கடா..! அப்போ நான் என்ன தான் பன்ன.?

அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத தூக்கு, போய் வயல கொத்து, நாலு வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து பத்து வருசத்து அப்புறம் நீ தான்டா சாமி எங்களுக்கு கடவுள்..!

ஏன்ணே இப்புடி சொல்ற.?

ஆமான்டா தம்பி, எல்லா படிப்ப படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா எல்லோரும் சாப்பிடுறதுக்கு விவசாயம் பன்ற ஆள் இல்லயேடா..!

அப்புடி சொல்லாதணே நான் இருக்கேன்.!

அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி, தூக்குடா மம்புட்டிய, வாடா வயலுக்கு போவோம், உனக்கு நான் உதவி பன்றேன்டா..!

விவசாயி_அழிந்தால் ? உலகமே_அழியும்..!!



Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem