Skip to main content

‘ஹயக்ரீவ மட்டி ’

ஹயக்ரீவ மட்டி*

*Hayagriva Maddi*

ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை ஒட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது.

அதன் உரிமையாளர் கடலையை

விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது,

ஒரு நாள் காலையில், உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது, ஒரு பகுதியில்

வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன.

கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார்.

அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன.

‘எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று நினைத்த உரிமையாளர், அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார்.

சற்று நேரத்தில்...

ஸ்ரீ வாதிராஜரின்

ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிற குதிரை ஒன்று வெளிவந்தது.

அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது.

இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார்.

அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது.

வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையில்,

ஸ்ரீ வாதிராஜரிடம் போய் நடந்ததை விவரித்து, நியாயம் கேட்டார்.

‘‘மடத்தில் அப்படிப்பட்ட குதிரை எதுவும் கிடையாதே! நிஜமாகத்தான் சொல்கிறாயா?’’ எனக் கேட்டார் ஸ்ரீ வாதிராஜர்.

‘‘நானே, என் இரண்டு கண்களாலும் பார்த்தேன் ஸ்வாமி! எதற்கும், இன்று இரவு மறுபடியும் பார்த்து விட்டு, நாளை காலையில் வந்து சொல்கிறேன் ஸ்வாமி!’’ என்ற உரிமையாளர்,

ஸ்ரீ வாதிராஜரை வணங்கி விடை பெற்றார்.

அன்று இரவும், அதே வெள்ளை குதிரை மடத்திலிருந்து வெளி வந்தது.

வழக்கம் போல் நிலத்தில் புகுந்து கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தியது.

பிறகு முந்தைய நாள் போலவே ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்தது.

ஸ்ரீ மடத்தின் வாயில் வரை அதை துரத்தி வந்த உரிமையாளரால் அன்றும் பிடிக்க முடியவில்லை.

எனவே, மறு நாள் பொழுது விடிந்ததும்

ஸ்ரீ வாதிராஜரின் முன்னால் வந்து நின்றார்

‘‘ஸ்வாமி! நேற்றிரவும் என் கண்ணாரக் கண்டேன்.

வெள்ளை வெளேர் என்ற குதிரை ஒன்று இந்த ஸ்ரீ மடத்தில் இருந்து வெளியே வந்தது.

எனது நிலத்தில் புகுந்து செடிகளை

நாசப்படுத்தியது. விடாமல் துரத்தி வந்த என் கைகளில் அகப்படாமல், அது

ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்து விட்டது!’’ என்றார் உரிமையாளர்.

ஸ்ரீ வாதிராஜர்,

‘‘நான் நேற்றே சொன்னேன். ஸ்ரீ மடத்தில் குதிரை கிடையாது. ஆனால் நீயோ, இப்படி சொல்கிறாய். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை!’’ என்றார்.

தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்திய நில உரிமையாளர், ‘‘ஸ்வாமி! ஏற்கெனவே என் நிலத்தில் நிறையச் செடிகள் பாழாகிவிட்டன. இனிமேலும் இழப்பு வந்தால் என்னால் தாங்க முடியாது ஸ்வாமி!’’ என்று மன்றாடினார்.

அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீ வாதிராஜர், ‘‘சரி... உனது வார்த்தையை நான் நம்புகிறேன். நீ போய் உனக்கு எவ்வளவு சேதமாகியுள்ளது என்று மதிப்பிட்டுச் சொல்.

இங்கிருந்து குதிரை வருகிறது என்று நீ

சொல்வதால், அந்த இழப்பை நானே ஈடு செய்கிறேன்.

உண்மையில் என்ன நடக்கிறது என்பது ஸ்வாமிக்குத்தான் வெளிச்சம்!’’ என்றார்.

‘நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு வழி பிறந்தது!’ என்ற ஆறுதலுடன், நிலத்தை நோக்கிப் போனார் உரிமையாளர்.

ஆனால், போனதை விட வெகு வேகமாகத் திரும்பி ஓடி வந்தார் உரிமையாளர்.

ஸ்ரீ வாதிராஜரை வணங்கிய அவர், ‘‘ஸ்வாமி... ஸ்வாமி... என் கண்கள் கூசுகின்றன.

எனது நிலத்தில் அற்புதம் விளைந்திருக்கிறது.

சேதமாகியிருந்த பகுதியில் எல்லாம் இப்போது தங்கக் கடலைகள் இறைந்து கிடக்கின்றன.

ஸ்வாமி! தங்கள் மடத்துக் குதிரை

சாதாரணமானதல்ல, தெய்வீகமானது!’’ என்று ஆச்சரியத்துடன் கூறினார்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்ரீ வாதிராஜர், பின்னர் தியானத்தில் அமர்ந்தார்.

வெள்ளை குதிரையாக வந்தது ஸ்ரீ ஹயக்ரீவரே என்பதைப் புரிந்து கொண்டார்.

அவரது தியானம் கலைந்தது.

‘‘ஸ்வாமி! தெரியாத்தனமாக வெள்ளைக் குதிரையை விரட்டி விட்டேன்.

அற்புதம் செய்த அந்தக் குதிரையை இன்று இரவில் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன்!’’ என்றார் நில உரிமையாளர்.

‘‘இனிமேல் உன்னால் அந்தக் குதிரையைப் பார்க்க முடியாது. பார்க்க முயன்றால், உன் பார்வை போய்விடும்!’’ என்று எச்சரித்தார் ஸ்ரீ வாதிராஜர்.

‘‘எனது பார்வை முற்றிலுமாகப் போனாலும் பரவாயில்லை. அந்த குதிரையை நான் பார்த்தே ஆக வேண்டும் ஸ்வாமி!’’ என்ற நில உரிமையாளர், ஸ்ரீ வாதிராஜரிடம் விடைபெற்று வீடு திரும்பினார்.

இரவு நேரத்தில் தனது நிலத்துக்குப் போய், குதிரையின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் நில உரிமையாளர்.

வழக்கம் போல் குதிரை வந்தது. அதைப் பார்த்த சற்று நேரத்துக்குள் அவரது பார்வை பறிபோனது. அதற்காக அவர் கவலைப்படவில்லை.

அதற்கு பதிலாக, ‘குதிரையாக தினமும் வந்தது தெய்வமே!’ என்பதை உணர்ந்து மெய்மறந்து அப்படியே உட்கார்ந்திருந்தார்

அவரது உன்னதமான பக்தியை கண்ட

ஸ்ரீ வாதிராஜர்,

நில உரிமையாளருக்கு மீண்டும் பார்வை தருமாறு ஸ்ரீ ஹயக்ரீவரிடம் வேண்டிக்கொண்டார்.

ஸ்வாமியின் அருளால் உரிமையாளருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்தது.

‘‘ஸ்ரீ மடத்தில் இருந்து வெளிப்பட்ட தெய்வக் குதிரையின் திருப்பாதங்கள் பதிந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம்’’ என்று சொல்லி, தனது நிலத்தை ஸ்ரீ மடத்துக்கு தானமாக கொடுத்தார் அவர்.

அன்று முதல், அந்த நிலத்தில் இருந்து விளையும் கடலையை வேக வைத்து வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கத்தை

உண்டாக்கினார்

ஸ்ரீ வாதிராஜர்.

*இது ஹயக்ரீவ மட்டி (Hayagriva Maddi) எனப்படும்.*

ஸ்வாமிக்காக தயாரிக்கப்பட்ட அந்த நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்து, இரண்டு கைகளாலும் பிடித்து தன் தலைக்கு மேல் வைத்து கொள்வார் ஸ்ரீ வாதிராஜர்.

அவருக்குப் பின்புறமாக ஸ்ரீ ஹயக்ரீவர்,

வெண்மையான குதிரை வடிவில் வந்து, தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி

ஸ்ரீ வாதிராஜரின் தோள்களின் மீது வைத்தபடி நைவேத்யத்தை முழுவதுமாக உண்ணாமல் கொஞ்சம் மீதி வைப்பார்.

அந்த மீதியை

ஸ்ரீ வாதிராஜர் உண்பார்.

இது அன்றாட நிகழ்ச்சி.

ஸ்ரீ வாதிராஜரிடம் பொறாமை கொண்ட ஒரு சிலர், ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷம் கலந்தனர்.

‘வழக்கப்படி, மீதியை

ஸ்ரீ வாதிராஜர் உண்பார். அவர் கதை முடிந்து விடும்!’ என்று நம்பினர்.

ஸ்வாமி, அன்று முழுவதுமாக உண்டு விட்டார். ‘ஏதோ நடந்திருக்கிறது!’ என்று

ஸ்ரீ வாதிராஜர் நினைத்தார்.

அப்போது குதிரை (ஸ்வாமி)யும் மயங்கிக் கீழே விழுந்தது.

இறைவனை தியானித்த ஸ்ரீ வாதிராஜர், வாதிராஜகுள்ளா எனும் ஒரு வகைக் கத்தரிக் காயை வேக வைத்து குதிரைக்கு கொடுத்தார்.

விஷம் நீங்கித் துள்ளிக் குதித்து எழுந்தது குதிரை.

ஸ்ரீ வாதிராஜர் செய்த ‘ஹயக்ரீவ மட்டி ’ (Hayagriva Maddi or simply Hayagreeva) எனும் அந்த நைவேத்தியத்தைத் தயாரித்து

ஸ்ரீ ஹயக்ரீவரின் அவதார நாளான ஆவணி மாத திருவோணத்தன்று

ஸ்ரீ ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், கல்வி, செல்வம் ஆகியவற்றைப் பெற்று மேன்மை அடையலாம்.

மாதந்தோறும் வரும் திருவோணத்தன்று ஹயக்ரீவ மட்டியைத் தயாரித்து அவருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுபவர்கள், எல்லா வளங்களையும் பெற்று மேன்மை அடைவார்கள்.


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...