ஒருமுறை விவேகானந்தர், வாரணாசி அருகே ஒரு கானகத்தின் நடுவே சென்று கொண்டிருக்கையில் அவரை ஒரு குரங்கு ஆக்ரோஷத்துடன் துரத்த ஆரம்பிக்கிறது.. அவரும் பயந்து ஓடத்தொடங்க , ஒன்று இரண்டாக ,இரண்டு நான்காகவென ஒரு கூட்டமே துரத்த வேறு வழியின்றி அவரும் தப்பிக்க ஓடலானார்.. சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு உள்ளுணர்வு தொற்றிக்கொள்ள ஓட்டத்தை நிறுத்தி, தைரியமாக நின்று அக்குரங்குகளை திரும்பிப்பார்த்தார்.. அவரின் பார்வைக்கணல் தாளாமல் தெறித்து ஓடி மறைந்தன அக்குரங்குகள்..
நீங்கள் அவமானத்திற்கு பயந்து ஓட ஆரம்பித்தால், யோசித்து பாருங்கள் எவ்வளவு குரங்குகள் உங்களை துரத்தும் என்று.. நாம் வாழ்வதே ஒரு கானகத்தில் தான்.. அவமானத்திற்கு தக்க பதிலடி, அவர்கள் முன் நாம் தைரியமாக எழுந்து நிற்பதே..
ஆனால் நாம் அனைவரும் விவேகானந்தர் ஆகிவிட முடியாதே..
மற்றோரு தருணத்தில் அக்கோஸா என்ற ஒரு அந்தணன், புத்தரை அவமதிக்கும் பொருட்டு அனைவர் முன்னிலையில் அவரை தீய சொற்களால் இடைவிடாது சிறிது நேரம் வசை பாடிவிட்டு ஓய்ந்தான்.. அவ்வளவு திட்டியும் சற்றும் சலனமில்லாத புத்தரின் முகத்தை பார்த்து அவனுக்கே ஆச்சர்யம்.. அவனை அருகே கூப்பிட்ட புத்தர் சில வினாக்களை அவன் முன் வைக்கிறார்..
புத்தர்: அக்கோஸா, உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்களா.
அக்கோஸா: ஆம், வருவார்கள், அதற்கென்ன இப்போது.
புத்தர்: அவர்களுக்கு உண்ண உணவும் நீரும் அளிப்பாயா.
அக்கோஸா: நிச்சயமாக, இப்போது அதெல்லாம் எதற்கு உங்களுக்கு.
புத்தர்: அவர்கள் அந்த உணவையும் நீரையும் சாப்பிட மறுத்துவிட்டால், அவை யாருக்கு சொந்தம்.
அக்கோஸா: கொடுத்த எனக்கு தான், அதிலென்ன சந்தேகம்.
புத்தர்: அதேபோல், நீ கொடுத்த வசைகளை நான் ஏற்பதாயில்லை.
பித்தம் தெளிந்த அக்கோஸா, புத்தம் ஏற்றான்.
ஆக நாம் அவமானத்திற்கு தரும் சிறந்த பதிலடி , புறக்கணிப்பு..
ஆனால் நாம் அனைவரும் புத்தர் ஆகிவிட முடியாதே..
முடிந்த அளவிற்கு, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றையோ அல்லது மூன்றையுமோ நாம் அவமானத்திற்கு பதிலடியாக தரும் பட்சத்தில்.. வெல்வது நாம் மட்டுமல்ல.. மனிதமும்..
Comments
Post a Comment