Skip to main content

சீக்குபுடிச்ச ராசா




அந்த காலத்துல ஒரு பெரிய மலைக்கு கீழ ஒரு சின்ன நாடு இருந்துச்சு.

அந்த நாட்டை ஒரு சீக்குபுடிச்ச ராசா ஆண்டுகிட்டிருந்தான்.

அந்த மலைக்கு மேல ஒரு நல்ல ஆட்டக்காரப்புள்ளை இருந்துச்சு.

ராசாவுக்கு வேட்டையாடற ஆச வந்துச்சு.
தன்னோட தளபதிய கூப்புட்டு அவனோட ஆசய சொன்னாம்.

தளபதியும் பல்லக்கு கட்டி சீக்குராசாவ
பொணத்த தூக்கறாப்புல நாலு ஆள வச்சு மலமேல தூக்கிட்டுப்போனாம்.

அங்கன போற பாதையில சீக்குராசா அந்த ஆட்டக்கார புள்ளைய பாத்தான்.

மன்மதன் சீக்கு ராசாவுக்குள்ள பூந்துட்டான்.
இடுப்பு செத்தா என்ன., ஆசை சாகலியல்லோ சீக்கு ராசாவுக்கி?

ஒடனே அவ வூட்டுக்குப்போயி,
"
உம்பொண்ணக்கெட்டி வெய்யி
எனக்கு "ன்னு அவ அப்பன்ட்ட பொண்ணு கேட்டான்.

"ராசாவாச்சே என்ன செய்ய?

"சரி "ன்னான். ஆட்டக்காரியோட அப்பங்காரன்.

பொண்ண அழைச்சுக்கிட்டு மல எறங்குனான் சீக்குராசா.

இது இருவத்தோராவது பொண்டாட்டி ராசாவுக்கு.

கண்ணாலம் கெட்னானே ஒழிய ஒண்ணும் முடியல சீக்கு ராசாவால.

மேலுக்கு ரொம்பவும் சொகமில்லாம போச்சு.

நம்ம தளபதிக்கோ ஆட்டக்காரி மேல ஒரு கண்ணு.

சீக்குராசாவோ முதுகுல ராஜபிளவைக்கட்டி வந்து கெடக்கான்.
கட்டுன புள்ள போன கார்த்திகைக்கு ஏத்துன பித்தள வெளக்காட்டம் தொலங்காம கெடக்குது.

தளபதி சமாச்சாரம் அரசல்புரசலா ராச காதுல வுளுந்தது.

சீக்குராசாவுக்கு மேலுக்குத்தான் முடியலியே ஒழிய மண்டக்குள்ள
ரோசனை நல்லாத்தான் ஓடுச்சு.

மந்திரிசபையக் கூட்டுனாம்.

"நா ஒரு கோயலக் கட்டலாமுன்னு இருக்கேன், நீங்கள்ளாம் என்ன சொல்றிய?"

"நல்லது ராசா, கண்டிப்பாச் செய்யணும். "
கால்ல விழுந்தது மந்திரிக்கூட்டம்.

'அப்ப ஆகவேண்டியதப் பாருங்க, சிவுக்குன்னு முடிச்சிரனும் பாத்துக்கங்க. ""

சபை கலைஞ்சது.

தளபதி கருவிக்கிட்டே இருந்தாம்.

இந்த சீக்கு ராசாவ எப்படியாவது சீக்கிரம் தீத்துப்போட்டு ஆட்டக்காரிய கைபுடிக்கணும்.

அரண்மனை வைத்தியரு கூட ஒப்பந்தம் போட்டுக்கிட்டான். "சீக்கிரமா ராசாவ காலி பண்ணனும்.ராசா போனதும் ஒனக்கு ஆனதச் செய்யுறன்"

டீல் ஓகே ஆச்சு. '

ராசாவுக்கு மருந்துன்னு எதையோ திங்கக் குடுத்தான் வைத்தியன்.

ராஜபிளவைக்கட்டி பெருசாயி வெடிக்கற நெலமைக்கு வந்திருச்சு.

காலெல்லாம் சொரணையே இல்லே.

மேலேல்லாம் காந்துது.

சீக்கு ராசாவுக்கு தன்னோட முடிவு தெரிஞ்சு போச்சு.

இந்த தளபதியவும், ஆட்டக்காரியவும்
போறதுக்குள்ள ஒரு வழி பண்ணிறனும்.

மந்திரிசபைய மறுபடி படுக்கையறைக்கு கூப்புட்டான்.

கூட தளபதியையும், ஆட்டகாரியையயும்.

"கோயில் வேலை ஆச்சா "

"இல்ல ராசா, நெறய பணம் வேணும் "

"அப்படியா? நம்ம தளபதி பக்கத்து நாட்டு மேல படையெடுக்கட்டும் "

மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டான் சீக்குராசா.

தளபதின்னு பேருதானே ஒழிய அவ எந்த சண்டையும் போட்டதில்ல.
சண்டைக்குப்போனா மவன் ஒழிஞ்சான்.

ஆட்டக்காரிய கூப்புட்டான்."நம்ம கோயில்ல 500 ஆட்டக்காரிக ராப்பகலா ஆடணும். அவியளுக்கெல்லாம் நீதா வழிகாட்டணும். அத்தன பேரும் கல்யாணம் மூச்சுக்கக்கூடாது.
சாமியத்தான் கெட்டிக்கணும் "னான்.

,(ங்கொய்யால, தளபதிப்பயலய கணக்குப்பண்ற நீ? இனி எவனையும் கெட்ட முடியாம பண்ணிப்புடறேன் , அதன்னி வாறவன் போறவன்லாம் ஒன்னிய கணக்கு பண்ணப்போறான் இரு, ன்னு ராசா மனசுக்குள்ளயே கருவிக்கிட்டான்.)

அய்யோ ராசா 500பேரு ஆடணும்னா கோயலெல்லா வெளக்கெரியணும்,
கொடங்கொடமா நெய் வேணும், கலங்கலமா நெல் வேணும்."

"அம்புட்டுதானே,
வெளச்சலுல பாதிய வரியா போடு.
மாடும் கன்னும் மேக்கிறவனுக்கு,
பாலும், நெய்யும் காக்கிறவனுக்குன்னு தண்டோரா அடிங்க மந்திரியாரே. "
ன்னாம் சீக்குராசா.

"இப்படி தின்னு கொழுத்தா சீக்கு வருமே ராசா"ன்னாரு வைத்தியரு.

"வைத்தியம் பாருங்க வைத்தியரே...அதுக்கு நா ஒண்ணு தருவேன்., நீர் ஒண்ண கேளும"் னான் ராசா....

எனக்கு கல்லு சொவரு கட்டவும், சொவத்துக்கு வெள்ள பூசவும்
அனுமதி குடுக்கணும்னாரு வைத்தியரு.

அப்படியே நடக்கட்டும்னான் சீக்குராசா.

"நான் ஒரு பரிசு தர்றேன்.உங்களை சம்பந்தி ஆக்கிக்கிடறேன்"னான்.

வைத்தியரு ஒத்த பிள்ளைய பெத்து வெளில தலகாட்டாமெ வளத்தாரு. அதுக்குத்தான் வெச்சாரு சீக்குராசா ஆப்பு.

சீக்குராசாவுக்கு கிறுக்குப்புடிச்ச ஊமப்பயல் ஒருத்தன் இருந்தான்.
அந்த பயலுக்குத்தான் வைத்தியரு புள்ளைய கெட்டச்சொன்னான் ராசா.

மூணு பேருக்கும் ஆப்பச் சொருகிட்டு
பிற்பாடு முதுகுல இருந்த கட்டி வெடிச்சு செத்துப்போனான் சீக்கு ராசா.

Aran Kumar பதிவிலிருந்து...



Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem