குட்டி கதை -நமது உணமையான பலம்
ஓரு வயதானபெரியவர் .பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய் பிச்சை எடுத்து வந்தார்..
இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை போட்டனர் பரிதாப ப் பட்டு பலர்.
ஒரு கடைகார ர் இவரையும் அழுக்கடைந்தபாத்திரத்தையும் மாறி மாறி பார்த்து..”முட்டாளே..”என்றார்..
”உங்களால் முடிந்தால் சில்லரை போடுங்கள்..இல்லையென்றால்அநாவசியமாக ஏன் கோப்படுகிறீர்க்ள..”பெரியவர்கேட்டார்..
அவ்வுளவுதான்..
அந்த பெரியவரின் பாத்திரத்தை பிடுங்கி தரையில் அடித்தார்..சில்லரை காசுகள் ரோடில் உருண்டோடியது..
மக்கள் கூடினர்..
”எனய்யா..அறிவிருக்கிறதா..முடிந்தால் போடு இல்லையென்றால் உன்வேலையைபார்த்துகொண்டிருக்க வேண்டியதுதானே..”சண்டை போட்டு சில்லரையை அவர் பாத்திரத்தில் சேர்த்தனர்..
கடைகாரர் சொன்னார்…”நீங்களும் உண்மை தெரியாமல் பேசுகிறீர்க்ள.இவருடைய இந்த அழுக்கடைந்த பாத்திரம் தங்கத்தினால் ஆனாது.அதை வைத்து பிச்சை எடுக்கிறார்.இந்த பாத்திரத்தை விற்றாலே இந்த கடைதெருவில் பாதியை வாங்கிவிடலாம்..” என்றார்
கதையின் நீதி
நமது உணமையான பலம் தெரியாமல் நாம் இயங்கிகொண்டிருக்கிறோம்.
Comments
Post a Comment