சிங்கம் ஒன்று பீடி பிடிச்சுட்டிருந்துச்சு
நரி சிங்கத்த பாத்து, “ஏன் பீடி குடிச்சுட்டு உடம்ப கெடுத்துகிட்டு இருக்கீங்க? எங்கூட வாங்க இயற்கை எவ்வளவு அற்புதமானதுனு காட்டுறேன்”னு சொல்லிச்சாம்
சிங்கம் சிறிது யோசித்த பின், “ஆமால்ல! நம்ம நல்லதுக்குதானே நரி சொல்லுது , தூக்கிப்போடுவோம்”னு போட்டுட்டு நரிகூட சேர்ந்து போக ஆரம்பிச்சது.
சிறிது தூரத்தில் புலி சுருட்டு பிடிச்சுட்டிருந்துச்சு
நரி புலிக்கிட்ட, “தயவு செஞ்சு அத தூக்கிப்போடுங்க, உடம்புக்கு கெட்டது பண்றத சேத்துக்காதிங்க. எங்கூட வாங்க, பறவைகளோட பாட்டு, நதியோட தாளம் எல்லாம் நான் கேக்க வைக்குறேன்”னு சொல்லிச்சு.
அது சொன்ன மாதிரியே பறவையோட பாட்டு, மயிலோட ஆட்டமெல்லாம் பாத்துட்டே நரி, சிங்கம், புலி எல்லாம் போய்ட்டிருந்தாங்க.
அப்போ யானை மது பாட்டிலை எடுத்து திறக்க பாத்துச்சு, புலியும் சிங்கமும் இத பாத்துட்டு நரிகிட்ட யானையயும் திருத்தலாம்னு சொல்லிட்டு, யானைகிட்ட மூணும் போச்சு.
நரி யானைகிட்டே, “தண்ணி அடிக்காதிங்க”னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே யானை பளார்னு நரி கண்ணத்துல அறஞ்சுடுச்சு. சிங்கமும் புலியும் மெரண்டு போய் யானைய பாத்தது.
யானை கேட்டதாம், “ என்ன பாக்கறிங்க?”
புலி யானைகிட்டே,” ஏம்பா நரி நம்ம நல்லதுக்கு தானே சொல்லுது. ஏன் தேவையில்லாமே குடிச்சு, உடம்ப கெடுத்துகிட்டு”னு சொல்லிச்சாம்.
யானை பொறுமையா ஒரு டம்ளர் குடிச்சுட்டே சொல்லிச்சாம், “இந்த பரதேசி, நேத்து கஞ்சா அடிச்சுட்டு என்னை காடு மொத்தமா சுத்திக்காட்டுனான், அந்த கால்வலி போகத்தான் இப்ப குடிக்க வேண்டியதாயிருச்சு!”
நன்றி:
Comments
Post a Comment