ஓர் இடைநிலை ஆசிரியரின் உள்ளக் குமுறல்... நாங்கள் அரசுப் பள்ளிகளை புனரமைத்து விட்டோம்... நாங்கள் அரசுப் பள்ளிகளுக்கு புத்தொளி பாய்ச்சி விட்டோம்... நாங்கள் அரசுப் பள்ளிகளை கணினி மயமாக்கி விட்டோம் என மார்தட்டிக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு. வகுப்பறையை நேசிக்கும் ஒரு ஆசிரியராக என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதில் முதல் கருத்தாக உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்ன என்றால், அது உங்கள் குழந்தைகளை தயவு செய்து அரசுப் பள்ளிகளில் சேர்க்காதீர்கள் என்பது தான் . ஏனென்றால் ஆரம்பக் கல்வி அளவில் அரசு பள்ளிகளால் தரமான கல்வியை கொடுக்க முடியாது. ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வியை பொறுத்தே அக்குழந்தையின் ஆளுமைத் திறன் இருக்கும் என்கிறது குழந்தை உளவியல். எனவே குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி என்பது மிக மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் நம் தமிழகச் சூழலில் ஆரம்பக் கல்வி என்பது ஆரோக்கியமாக இல்லை. ஏனெனில் குழந்தைகள் ஒவ்வொரு வயதிலும் ஒரு குறிப்பிட்ட மனவோட்டம், மனவெழுச்சி, நாட்டம், விருப்பம் ஆகிய தன்மைகளைக் கொண்டிருப்பர். ஆக அந்த வயதிற்கு உரிய வகுப்பறைகளே அவர்கள...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு