Conversation Starter · October 25 at 10:47 AM Prema Sangar to கம கம சமையல் (சைவம்) September 1, 2018 அதிரசம் பச்சரிசி - ஒரு டம்ளர் உருண்டை வெல்லம் -. 3/4 டம்ளர். நெய் - சிறிது தண்ணீர் - 1/4 டம்ளர் ஏலக்காய் - 5 எண்ணெய் - பொரிக்க செய்முறை; பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின் கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும். நன்கு தண்ணீர் வடிந்து உலர்ந்ததும்,மிக்சியில் பொடித்து சலித்து எடுக்கவும்.இரண்டு மூன்று முறை அரைத்து சலித்து மாவாக்கி வைக்கவும். வாணலியில் தண்ணீர் விட்டு வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.பின் இறக்கி வடிகட்டி மறுபடியும் வெல்லப்பாகை கொதிக்க விடவும்! பாகு நன்கு கொதித்து நுரைத்து வரும். சற்று நேரம் கிண்டவும். உருண்டைப் பாகு பதம் வந்ததும்( கரண்டியில் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் போட்டால் கரையாமல் உருளும்) இரட்டைக் கம்பிப் பதம் வந்தாலும் சரி! கரண்டியில் எடுத்து ஊற்றும் பொழுது கரண்டியிலிருந்து இரண்டு கம்பிகள் நேராய் இழுத்துக் கொண்டு விழவேண்டும். இப்போது வாணலியை இறக்கி, பாகில் அரிசி மாவைத் தூவி, ஒரு ஸ்பூன் நெய் விட்...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு