ஒரு மனிதனுக்கு நீண்ட நாட்களாக தியானம் செய்ய ஆசை.ஆனால் எப்போது தியானம் செய்ய அமர்ந்தாலும் ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டது.பக்கத்து வீட்டில் குழந்தைகள் கத்தும். இல்லாவிட்டால், யாராவது சண்டை போடுவார்கள், ஒரே இரைச்சலாக இருக்கும்.
வேறு ஏதாவது இடம் பார்க்க வேண்டும் வீட்டில் தியானம் செய்வது முடியாத காரியம் என்று அவன் நினைத்தான்,அதனால் கொஞ்ச தூரத்தில் சிறிய காட்டுப்பகுதி இருந்தது. அங்கு சென்று தியானம் செய்யலாம் என்று முடிவு செய்தான்.
மறுநாள் அங்குள்ள நதிக்கரையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அழகான பெண்ணொருத்தி ஒரு குடத்துடன் அங்கு வந்தாள். நதியில் நீர் நிரப்பிக் கொண்டு சென்றாள்.இவன் நினைத்தான். "இந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள்...!" உடனே தான் தியானம் செய்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
உடனே தன்னைத் தானே கடிந்துக் கொண்டு மீண்டும் தியானம் செய்யத் தொடங்கினான்.
அடுத்த நாள் ஒரு துணியினால் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்யத் தொடங்கினான். சிறிது நேரத்தில் கொலுசின் ஒலி காதில் கேட்டது. இவன் நினைத்தான். "ஓ அந்தப் பெண் வந்திருக்கிறாள்."அடுத்தநாள் கண்ணையும் காதையும் சேர்த்து கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மல்லிகையின் மணம் வந்தது.
இவன் நினைத்தான். " அந்தப் பெண் வந்திருக்கிறாள்."அடுத்தநாள் கண், காது மூக்கு அனைத்தையும் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து இவன் நினைத்தான். "அந்தப் பெண் வந்துவிட்டு போயிருப்பாளோ...?"
நீதி: மனம் ஒத்துழையாவிட்டால் எதுவும் செய்ய முடியாது-
Thanks to Karunanithi Murugesan /kali Gounder/ FB

Comments
Post a Comment