என். சொக்கன்
நேற்று ஒரு நண்பரிடம் (அலுவலகப் பிரச்னை) எதையோ பேசிக்கொண்டிருந்தபோது, நடுவில் ஒரு விஷயம் சொன்னார். அதை நினைத்து இந்த விநாடிவரை வியந்துகொண்டிருக்கிறேன்.
'எந்த சமூகத்திலும் 60% முட்டாள்கள் இருப்பார்கள். 30% சுமாரான புத்திசாலிகள் இருப்பார்கள். 10% அதிபுத்திசாலிகள் இருப்பார்கள். இந்தச் சமூகத்துக்குத் தலைவராக விரும்புகிற ஒருவர் என்ன செய்வார் தெரியுமா? அந்த 60% பேருடைய மனம் கவரும்படி பேசுவார், நடந்துகொள்வார், இதன்மூலம் அவர் எளிதில் Mass Leader ஆகிவிடலாம். மீதி 30% பேர் அவரை ஒருமாதிரி அருவருப்பாகப் பார்ப்பார்கள், ஆனால் எதிர்க்கமாட்டார்கள், 10% பேர் எதிர்ப்பார்கள். அவர்களிடம் தர்க்கம், புத்திசாலித்தனம், முன்னேற்ற சிந்தனை எல்லாம் இருக்கும். அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆனால் அவர்களுடைய எதிர்ப்பு, மீதி இருக்கிற 90% பேருக்குப் புரியாது. ஆகவே, இந்தத் தலைவர்கள் எளிதில் ஜெயித்துவிடுவார்கள்.'
இதை அவர் சொன்னதும் மிக வியப்பாக, ஆனால் மிக உண்மையாகத் தோன்றியது. 'எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
'ஹிட்லருடைய சுயசரிதையைப் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்.
'ஓ, படித்தேனே' என்றேன்.
'கதையைமட்டும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்னொருமுறை ஊன்றிப் படியுங்கள். அவருடைய வாழ்க்கையின் ஒரு பத்திச் சுருக்கம் இதுதான். இன்றுவரை பல நிறுவனங்களின், கட்சிகளின், அணிகளின், நாடுகளின் தலைவர்கள் அச்சடித்தாற்போல் பின்பற்றிவரும் சூத்திரமும் இதுதான்' என்றார்.

Comments
Post a Comment