Skip to main content

♡♡சிரிங்க நல்லா சிரிங்க ♡♡


நீதிபதி :
"உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"
அப்பாவி கணவர்;
"அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.
சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.
வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?
பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.
வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"
பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?
வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது.
பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்.
வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?
பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க.
வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?
பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.
வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க.
இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்)
“உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?"
பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க. உங்களுக்கென்ன மாரடைப்பா வந்திரிச்சு?
இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க. கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி கீழே விழுந்தார்.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem