ஒரு ஜென் கதை:
"அது மலைப்பாங்கான ஒரு தேசம். அங்குள்ள சாலைகள் கல்லும்,கரடுமாக இருந்தன.அது நடப்பவர்களின் கால்களில் குத்தித் துன்புறுத்தின.அந்த வழியாகத்தான் மன்னன் வேட்டைக்கு செல்வான்."அந்த வழியெல்லாம் மாட்டுத் தோலை விரிக்க உத்தரவிடப் போகிறேன்"என்றான் மன்னன். அப்போதுதான் நடப்பதற்கு மெத்தென்று இருக்கும் என்பது அவன் எண்ணம்.
"இது என்ன அறியாமை" என்றார் குரு. சாலை முழுவதும் தோலால் போர்த்துவதைவிட உன் கால்களில் இரண்டு தோல் துண்டுகளை அணிந்தால் போதுமே"என்று அறிவுரை கூறினார் அவர்.
இதைக் கேட்ட மன்னன் விழிப்புணர்வு பெற்றான்.
உலகத்தையே உனக்கேற்ப வளைப்பதைவிட உன் மனத்தை உலகுக்கேற்ப வளைத்துக்கொள்!"என்கிறது ஜென்.
Comments
Post a Comment