Skip to main content

கால்நடை மருத்துவர்




 
நல்லா சிரிச்சிட்டு நமக்கு அந்த கால்நடை மருத்துவர் விலாசத்தை கொடுத்திடுங்க , please.
ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை.
குணமாகவில்லை. என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, "நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?" என்றார்.
அதிர்ச்சி அடைந்த கணவன், "உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றார்.
மனைவி சொன்னாள்: எனக்கொன்றும் இல்லை. உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு.காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க.அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரிக் குறைக்கிறீங்க. அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க.
அதனால தான் சொல்றேன், இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர் தான் குணப்படுத்த முடியும்." என்ன சொல்வதென்று கணவன் முழிக்க, "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க?" என்று முத்தாய்ப்புடன் முடித்தாள் மனைவி.
(படித்ததில் ரசித்தது)

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem