பழமொழிகள்.....பத்துக்கு
புதுமொழிகள்.....பத்து
பழசு: பல் போனா சொல் போச்சு
புதுசு:செல் போனா சொல் போச்சு
பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!!
புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்..
பழசு: இளங்கன்று பயமறியாது..!!
புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..
பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!
புதுசு: செல்லின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்
பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!
புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது..
பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!
புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..
பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!
புதுசு: போனு ஒண்ணு.. சிம்மு ரெண்டு.
பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
புதுசு: 4ஜி இல்லாமல் போனை வாங்காதே..
பழசு: தேனெடுத்தவன் கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!
புதுசு: நெட் எடுத்தவன் பொழுதை போக்காமல் இருக்க மாட்டான்..
பழசு: பேராசை பிறந்தா பெருநஷ்டம்..!!
புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..
நன்றி Sridhar Nambi
Comments
Post a Comment