Skip to main content

Posts

Showing posts from June, 2017

ஒரு ஜென் கதை:

ஒரு ஜென் கதை: "அது மலைப்பாங்கான ஒரு தேசம். அங்குள்ள சாலைகள் கல்லும்,கரடுமாக இருந்தன.அது நடப்பவர்களின் கால்களில் குத்தித் துன்புறுத்தின.அந்த வழியாகத்தான் மன்னன் வேட்டைக்கு செல்வான்."அந்த வழியெல்லாம் மாட்டுத் தோலை விரிக்க உத்தரவிடப் போகிறேன்"என்றான் மன்னன். அப்போதுதான் நடப்பதற்கு மெத்தென்று இருக்கும் என்பது அவன் எண்ணம். "இது என்ன அறியாமை" என்றார் குரு. சாலை முழுவதும் தோலால் போர்த்துவதைவிட உன் கால்களில் இரண்டு தோல் துண்டுகளை அணிந்தால் போதுமே"என்று அறிவுரை கூறினார் அவர். இதைக் கேட்ட மன்னன் விழிப்புணர்வு பெற்றான். உலகத்தையே உனக்கேற்ப வளைப்பதைவிட உன் மனத்தை உலகுக்கேற்ப வளைத்துக்கொள்!"என்கிறது ஜென்.

அரசியலும் முட்டாள்களும்

என். சொக்கன் June 17 at 1:36pm · நேற்று ஒரு நண்பரிடம் (அலுவலகப் பிரச்னை) எதையோ பேசிக்கொண்டிருந்தபோது, நடுவில் ஒரு விஷயம் சொன்னார். அதை நினைத்து இந்த விநாடிவரை வியந்துகொண்டிருக்கிறேன். 'எந்த சமூ கத்திலும் 60% முட்டாள்கள் இருப்பார்கள். 30% சுமாரான புத்திசாலிகள் இருப்பார்கள். 10% அதிபுத்திசாலிகள் இருப்பார்கள். இந்தச் சமூகத்துக்குத் தலைவராக விரும்புகிற ஒருவர் என்ன செய்வார் தெரியுமா? அந்த 60% பேருடைய மனம் கவரும்படி பேசுவார், நடந்துகொள்வார், இதன்மூலம் அவர் எளிதில் Mass Leader ஆகிவிடலாம். மீதி 30% பேர் அவரை ஒருமாதிரி அருவருப்பாகப் பார்ப்பார்கள், ஆனால் எதிர்க்கமாட்டார்கள், 10% பேர் எதிர்ப்பார்கள். அவர்களிடம் தர்க்கம், புத்திசாலித்தனம், முன்னேற்ற சிந்தனை எல்லாம் இருக்கும். அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆனால் அவர்களுடைய எதிர்ப்பு, மீதி இருக்கிற 90% பேருக்குப் புரியாது. ஆகவே, இந்தத் தலைவர்கள் எளிதில் ஜெயித்துவிடுவார்கள்.' இதை அவர் சொன்னதும் மிக வியப்பாக, ஆனால் மிக உண்மையாகத் தோன்றியது. 'எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'ஹிட்லருடைய ...

அக்பர்

கடவுளின் தேடல். ============== அக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை ந ேரம் வந்தது.. ஜந்து வேளையும் தொழுகை செய்யும் வழக்கம் இருந்ததால் அக்பர் மண்டியிட்டுத் தொழுகையில் ஈடுபட்டார். மரம் வெட்டச் சென்று.. வீடு திரும்பாத கணவனைத் தேடிக்கொண்டு அந்த நேரத்தில் அங்கே வந்தாள் காட்டில் வாழ்ந்த பெண். தொழுகையில் இருந்த அக்பரைக் கவனிக்காமல் வந்ததால் அவர் மீது இடறி சென்றாள். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவள் சுதாகரித்துச் சென்று விட்டாள். மாமன்னனாகிய தன்மீது மோதியதும் அல்லாது மன்னிப்புகூட கேட்காமல் செல்லும் அவளைக் கண்டு அக்பர் மிகவும் கோபம் கொண்டார். ஆனால் தொழுகையை இடைநிறுத்த விரும்பாது தொடர்ந்தார். அந்தப்பெண் கணவனுடன் திரும்பி வந்த போது அக்பர் தன் தொழுகையை முடித்திருந்தார். அவர்களை கோபமாக நிறுத்தினார். "இந்த நாட்டின் மன்னன் என்று தெரியுமா..?தொழகையில் இருந்த என்னை இடறிவிட்டு மன்னிப்புகூடக் கேட்காமல் போகிறாயே..! என்ன திமிர்..? என்று கேட்டார் அக்பர். அதற்கு அந்த பெண் சற்றும் தயங்காமல...

Chemistry

ஈமெயில்

ஈமெயில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று...
நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது நம்மால் முடியுமென்று உன்னை நம்பு !! ஒரு பெரிய கதை .... ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது . அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும் . ஆனால் , அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே ! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள் . அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது . வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே ! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும் ; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும் . இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது . இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன் . ஆக , மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து , ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம் . இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது . இருப்பினும் ஒரு சிலர் ' எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம் ; மன்னனாகவே மடியலாமே !' என்று பதவி ஏற்பதுண்டு . அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரண...

Vyabaari

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான் . யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத்   தகுதியானவன் என்று அறிவித்தான் . மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர் . ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர் . ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர் . அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான் . ஓரு மகன் சொன்னான் . “ நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்” வியாபாரி கேட்டான் . “ எப்படி ?” “ புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன் . இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது . அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள...

கால்நடை மருத்துவர்

  நல்லா சிரிச்சிட்டு நமக்கு அந்த கால்நடை மருத்துவர் விலாசத்தை கொடுத்திடுங்க , please. ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார் . பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை . குணமாகவில்லை . என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி , " நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது ?" என்றார் . அதிர்ச்சி அடைந்த கணவன் , " உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா ?" என்றார் . மனைவி சொன்னாள் : எனக்கொன்றும் இல்லை . உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு . காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு , அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு , குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு , பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி , அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க . அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க . சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரிக் குறைக்கிறீங்க . அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு , எருமை மாடு மாதிரி தூங்கறீங்க . அதனால தான் சொல்றேன்...
ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன . பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன . தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும் . ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது . குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான் . குரங்குகளுக்கு சந்தோஷம் . ஆனால் , அவற்றுக்கு ஒரு பிரச்னை . எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை . '' அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை . வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க . சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா , ஊத்துங்க '' என்று யோசனை சொன்னான் . வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி . அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன . '' என்னாச்சு ?'' என்றான் தோட்டக்காரன் . '' வேர் பெருசா இருக்கா , சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக , செடியெல்லாம் பிடுங்கினோம் '' என்றன குரங்குகள் . தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால் , விளைவு  மோசமாக...