Skip to main content

Mylapore -a vivid description

Chithra Viswanathan is with Usha Sridhar.
29/04/2020
மதுரையில் இருந்து........
நான் மாண்புமிகு மதுரையில் பிறந்து வளர்ந்து, சென்னயில் வாழ்க்கைப் பட்டேன் !புக்ககம் மயிலையில் அமைந்தது.
மதுரை ஆனி வீதி, ஆவணி மூல வீதி என்று சுற்றியவளுக்கு, மயிலை பிரமிப்பைத் தந்தது..மாட வீதி, பிடி படவே, ‘நாட்கள் ஆனது சற்று கூச்சமாகவே இருந்தது !
என் கல்யாணப் புடவைகள் எல்லாம் சம்பூர்ண சாஸ்திரி கடையில் வாங்கியதால், அந்த கடையைப் பார்க்க விரும்பினேன்.அந்த எளிமை எனக்கு வியப்பைத் தந்தது !!வருடா வருடம் தீபாவளிக்கு புடவைகள் ராசி கடையில் வாங்குவது தான் என் புக்ககத்துக்கு ராசி!அப்பொழுது அது ஒரு நாகரீகம் கூட!
அம்பிகா அப்பளம் துடங்கிய புதிது. மிகச் சிறிய கடை. அதன் வளர்ச்சி என் கண் முன்னே தான் நடந்தது ! 1964 ல் என் தங்கை லண்டன் போகும்போது அங்கிருந்துஆவக்காய் ஊறுகாய் வாங்கிக் கொடுத்தது எனக்கு பெருமை பிடி படவில்லை!!
ஶ்ரீ வித்யா மஞ்சள் குங்குமக் கடை மாமா மாமியை மிகவும் பிடித்துப் போனது. அந்த கடையின் மணம் இன்னும், என் மூக்கில் இன்னும் எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறது !!
தெப்பக்குளம், எனக்கு, மதுரை பொற்றாமரைக் குளத்தை நினைவு படுத்தியது. ஆனால் தெப்பம் பார்த்தது இல்லை. கூட்டத்தில் போய் பார்ப்பதில் என்னுடைய "அவருக்கு" அபிப்பிராயம் இல்லை.
நமக்காக தனியாக தெப்பம் நடக்குமா என்று எதிர்த்து கேட்க எனக்கு தைரியம் இல்லை. என்ன இருந்தாலும், நான் அந்த காலத்து மனுஷி அல்லவா ?!!
டி கே மூர்த்தி மாமா கடை எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு இடம்!! அழகிய மாங்காய் மாலைகள் கையைக் கடிக்காமல் வாங்கலாம்!
மதுரையில், வாங்கம்மா, போங்கம்மா என்று பேசிப் பழகியவளுக்கு, சென்னை மொழி புரிபட, நாள் ஆனது மட்டுமல்ல, கொஞ்சம் உறுத்தலாகவும் இருந்தது !! இன்னாம்மா, குந்தும்மா என்ற வார்த்தைகள்கேட்கவே நாராசமாக இருக்கும். இப்பொழுது பழகி விட்டது !
என் மாமியார் அகத்தில், வெளியில் வாங்கி சாப்பிடும் வழக்கம் அறவே கிடையாது. மதுரை கோபு ஐயங்கார் கடையில் ஆசை தீரவெளுத்திக்கட்டியவளை, மத்தள நாராயணன் கடை வெங்காய பகோடா மணம், கிட்டத் தட்ட அழவே வைத்தது.காளத்தி கடை ரோஸ் மில்க் பற்றி யாராவது சொன்னால், நாவில் நீர் ஊறும் !!வாழ்க்கைத் தத்துவங்களில், சவாலே சமாளி என்பதை, அனுபவ பூர்வமாக உணவைப் பொறுத்த வரை கடைப் பிடித்தேன் !!
கபாலீச்வரர் கோவில் வாசலில் கிரீஸ்டிரேடர்ஸ் கடை சின்னதாக இருந்தது. இப்பொழுது மிக பிரபலமான டி எஸ் ரங்கநாதன் அவர் தந்தை திரு கிரியுடன் கடையில் இருப்பார். கடையில் இருக்கும் காசட்டுகளில் உள்ள பாட்டுக்களை அவ்வளவு இனிமையாகப் பாடியே என்னை நிறைய வாங்க வைப்பார். அனுப் ஜலோடா, ஜகஜித் சிங் பாடல்களுக்கு நான் அடிமையானதுக்கு அடித்தளத்தை அவர் அமைத்தார் என்றால் மிகையாகாது.
மைலாப்பூர் லியோ காபி அன்றையிலிருந்து இன்று வரை பிரசித்தம். அங்கு கியூவில் நின்று வாங்குவதற்கு அலுத்ததே இல்லை ! அதன் தரமே அன்றும் இன்றும் தனி தான்! சித்திரை குளத்தில் கறிகாய் வாங்கி விட்டு, அத்துடன் மணக்க மணக்க காபி பொடியுடன் வீடு திரும்புவது வழக்கம்!
அடாடா, முக்கியமான ஒரு இடம் இன்னும் சொல்லவே இல்லையே. அது தான் ராமகிருஷ்ணா மடமும், அதன் புத்தக கடையும். அந்த எளிமையான விலையில் அவர்கள் விலை மதிப்பிலா புத்தகங்களை விற்பது, அவர்கள் சாமான்யர்களுக்கு செய்யும் ஒரு உன்னத சேவை.
ராயர்ஸ் கபே வாசலில் கியூவில் பெரிய மனிதர்களே நிற்பார்கள். பஞ்சு போல் இட்லிக்கும், முறுகல் ரவா தோசைக்கும் ரசிகர் குழாமே உண்டு!
லஸ்ஸில் lakhs and lakhs, மிகவும் பிடித்தமான கடை.அது முதலில் வந்த பின் தான் மற்ற கடைகள் வந்தன. ராணி கட்பீஸ் வாராவாரம் போகும் கடையாகிப் போனது. இவை இரண்டையும் சொல்லி விட்டுநேரு நியூஸ் மார்ட்டை சொல்லாமல் விடவே முடியாது. எல்லா தினசரிகளும் வாராந்தரிகளும் காலண்டர்களும் அங்கே கண்டிப்பாக கிடைக்கும்.
வினாயக சதுர்த்தி, நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் முக்கியமான பண்டிகை காலங்களில் மாட வீதிகளில் பிளாட்பாரம் கடைகள், மக்கள் நடமாட்டம் என்று கூட்டம் நெரிந்தாலும், அங்கே ஒரு "ரவுண்டு" வருவது ஒரு ரசனையான விஷயம்.
மயிலாப்பூர் என்றால் மாட வீதிகள் மட்டும் தானா என்று என்னிடம் கேட்டு விடாதீர்கள். திருமயிலையின் அழகு கபாலீச்வர்ர் கோவிலிலும், அதன் நான்கு மாட வீதிகளிலும் சற்று அதிகமாகவே மிளிருகிறது.மயிலாப்பூரின் பழமை மாறி வந்தாலும், நானும் அடையாறுக்கு மாறிவந்து விட்டாலும், என்னை ஒரு மயிலாப்பூர் மாமி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளுகிறேன்!!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Thamizh Poem

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...