சுயநலத்தை பத்தி ஒரு நல்ல கதை எனக்கு ஒரு ஓமானி நண்பன் சொன்னான் , அது ஒரு அரபி கதையாகும்
ஒரு
ஊரில் ஒரு கசாப்பு கடைக்காரர் இருந்தார் ,அவர் வீட்டில் எலி தொல்லை
அதிகமாக இருந்தது அதுனால் ஆத்திரம் அடைந்த அவர் அதை பிடிக்க எலிப்பொறி
ஒன்றை வாங்கி வர ,அதை பார்த்த எலி ஓடி போய் வீட்டின் கூரை மீது வசித்த வந்த
புறாவிடம் ," புறா , என்னை பிடிக்க கசப்புக்காரர் எலிப்பொறி வாங்கி கொண்டு
வந்துருகிறார் " னு சொல்ல, அதற்கு புறா " அதுனால் எனக்கு என்ன, நான் எந்த
ஒரு பிரச்னையும் இல்லாமல் கூரையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் " என்றது
எலி
வீட்டில் வளரும் கோழியிடம் சென்று முறையிட்டது ,அதற்கு அந்த கோழி "
அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ,நான் இந்த வீட்டில் நன்றாக வாழ்கிறேன் ,
முதலாளி அம்மா எனக்கு தினம் நல்ல தீவனம் போடுகிறார்கள் ,உன் பிரச்சனை
உனக்கு " னு சொல்லி சென்று விட்டது
எலி
அந்த வீட்டில் வளரும் ஆடுயிடம் சென்று தன் பிரச்னையை சொன்ன பொது , "
எனக்கு என்னப்பா முதலாளி என்னை நல்ல கவனித்து கொள்கிறார் ,உனக்கு பிரச்சனை
வந்தா நான் என்ன பண்ண முடியும் ,என்னிடம் வந்து பொலம்பாதே " என்று பதில்
அளித்து அந்த எலியை அனுப்பி விட்டது .
மறுநாள்
அந்த எலிப்பொறியில் இருந்து சத்தம் வர , அவரின் மனைவி எலி சிக்கி விட்டது
என்று எண்ணி பொறிக்குள் கையை விட ,உள்ள இருந்தது எலி இல்லை கொடிய விஷம்
உள்ள தேள் ,அது அந்த பெண்மணியின் கையில் கொட்டி விட்டது , சற்று நேரத்தில்
உடல் முழுவதும் விஷம் பரவி உடல் நீல நிறத்தில் மாற தொடங்கியது ,அதை பார்த்த
கசாப்புக்காரர் ஓடி போய் ஹக்கீம் (வைத்தியர்) கூட்டிகிட்டு வந்தார்
,ஹக்கீம் தன் கைவசத்தில் இருந்த மூலிகையை குடுத்து விஷம் பரவலை தடுத்து
விட்டார் ,பிறகு கசாப்புக்காரர்யை பார்த்து ,"விஷம் முழுமையைக்காக இறங்க
புறா சூப்பு வைத்து கொடுங்கள் "என்று சொல்லி கிளம்பிவிடுகிறார் ,
கூரையின்
மீது இருந்த புறா இப்போ சூப்பு கிண்ணத்தில் இருந்தது, நலம் விசாரிக்க
நிறையா உறவினர்கள் வந்தார்கள் அவர்களை கவனிக்கும் பொருட்டு வீட்டில்
வளர்ந்த கோழி அடித்து விருந்து ஆகி விட்டார் ,
10
நாள் சென்று தன் அன்பு மனைவி முழுமையாக குணம் பெற்ற பிறகு ,வீட்டில்
வளர்ந்த கிடாயை வெட்டி ஊருக்கே பிரியாணி போடுகிறார் ,மற்றும் இனி அந்த
எலிப்பொறி வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிடுகிறார் .
எலி அதன் பொந்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது .
இந்த
பூமியில் ஒரு கஷ்டம் வரும் போது அந்த கஷ்டம் இங்கே வாழும் அனைவருக்கும்
தான் , எனக்கு என்ன ,அவனுக்கு தானே வந்துருகிறது என்று நினைத்து வாழ்ந்தால்
முதலில் அந்த பிரச்சனை நமக்கு தான் பாதிப்பை தரும் .
Comments
Post a Comment