Skip to main content

விவசாயம் - சிறுகதை...

Copied and pasted
விவசாயம் - சிறுகதை......
அடங்கி ஆரவாரமில்லாமல் இருந்தது ஏமாளிப்பட்டி கிராமம். திண்ணையில் இருந்த நாற்காலியில் தாத்தா குமாரசாமி அமர்ந்திருந்தார். உள்ளிருந்து அப்பா ராமசாமி முகத்தை துடைத்தவாறே வெளியே வந்தார்.
ஏப்பா ராமசாமி உழவுக்கு வண்டி வரச்சொன்னமே வந்துருச்சா.....
தாத்தா கேட்டார்.
இன்னும் வரலப்பா, காலையிலேயே போன் பண்ணுனேன். வர்றன்னுதான் சொன்னாங்க...... அப்பா அமைதியாய் பதில் சொன்னார்.
மறுபடியும் போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேளுப்பா. டீசலுக்கு பணம் இல்லைனு சொன்னா போய் பணம் குடுத்து டீசல் புடிச்சிகிட்டு வரச்சொல்லு. மெயின் ரோட்டுல எங்கேயாவது வண்டிய மறிச்சிருந்தாலும் நீ நேர்ல போயி விவரம் சொல்லி கூட்டிட்டு வா.....
தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அப்பா கிளம்ப ஆயத்தமானார்.
பாட்டி மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு வந்துகொண்டிருந்தார். தாத்தாவின் அடுத்த கேள்வி பாட்டியின் பக்கம் திரும்பியது.
செல்லம்மா........ ஆளுங்க வந்துட்டாங்களா?
வந்துட்டாங்க...... களை எடுக்க நாலுபேரை அனுப்பிட்டு காய் அறுக்க நாலு பேரை போகச்சொல்லியிருக்கேன். டீத்தண்ணி வைச்சு எடுத்துகிட்டு நானும் போகணும் என்றாள் பாட்டி.
சாயந்திரம் வீட்டுக்கு போகும்போது அரிசி, பருப்பு , காய்கறியெல்லாம் கொடுத்து அனுப்பு வெறும் பணத்தை வைச்சிகிட்டு எதுவும் வாங்க முடியாம சிரமப்பட போறாங்க........ தாத்தா சொல்லி முடிக்குமுன்பே பாட்டியிடமிருந்து பதில் வந்தது.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..
நல்ல பொருத்தமான ஜோடி.....
அம்மியில் ஏதோ அரைத்து கொண்டிருந்த அம்மா முனகினார்...
கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை இழந்து கொண்டிருந்தேன். ஆனால் அம்மா முந்தி விட்டாள்.
ஏன் மாமா...... ஊருபூரா ஏதேதோ நடக்குது. டவுனுல எல்லாம் கடையை பூட்டிகிட்டு வீட்ல உட்கார்ந்துகிட்டு இருக்காங்க....... நீங்க மட்டும் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வேலை செய்ஞ்கிட்டு இருக்கீங்க..... ஒரு பத்துநாள் சும்மாதான் இருங்களேன்.
ஏம்மா..... நாம மட்டுமா வேலை செய்றறோம். போலிஸு, டாக்டருங்க, தூய்மை பணியாளருங்கன்னு பல அரசு துறைகள் வேலை செய்ஞ்சிகிட்டுதாம்மா இருக்காங்கா... தாத்தா அமைதியாய் பதில் சொன்னார்.
அதுக்கில்ல மாமா...... இப்ப வௌஞ்ச காய்கறியை விக்கவே சிரமமா இருக்குது. மறுபடியும் விதைச்சு அறுத்து சிரமப்படனுமான்னுதான் கேட்டேன்...... அம்மா விடாது தொடர்ந்தாள்.
இப்போது தாத்தா என் பக்கம் திரும்பினார்.
குமாரு..... இந்த சொட்டுநீர் கம்பெனிகாரங்க வருவாங்களான்னு கேளு. எந்த கம்பெனியும் கமிசன் சரியா கொடுக்கல, அட்வான்ஸ்கூட தராததால ரொம்ப சிரமப்படறதா சொன்னாங்க... அப்படி வர்ர மாதிரி இருந்தா தங்கி வேலை செய்ய சொல்லு...... சாப்பாடு எல்லாம் நம்ம வீட்லயே சாப்பிடட்டும்.... எனக்கும் உத்தரவு வந்தது...
ஏற்கனவே வெளியே எங்கேயும் போக முடியாத கடுப்பில் பதில் சூடாக வந்தது.
ஏன் தாத்தா..... சும்மாவே இருக்க மாட்டிங்களா........ பேசாம டிவி பார்த்துகிட்டு இருக்கவேண்டியதுதானே
..........
எவ்வளவு நாள்தாம்பா .... சும்மா இருக்கறது...... தாத்தா சிரித்தார்..
ஒருமாசம், ரெண்டு மாசம்தான் ஆகட்டும்...... இப்ப என்ன கெட்டுபோயிடும்....... ஊரடங்குமேல் இருந்த கோபம் தாத்தா மீது இறங்கியது......
ரெண்டுமாசம் கழிச்சி?....... தாத்தா புன்னகையோடு வெற்றிலையை எடுத்தார்........
இதெல்லாம் அப்ப செஞ்சிக்கலாம்.... புத்திசாலிதனமாய் பதில் சொன்னேன்.
தாத்தா வெற்றிலையில் சுண்ணாம்பை தடவியபடியே கேட்டார் நான் அதைக்கேக்கலப்பா...... ரெண்டு மாசம் கழிச்சி என்ன சாப்பிடுவன்னு கேட்டேன்.
அதிர்ந்தேன்......
கேள்வி புரிய துவங்கியது.
அம்மி நின்றது.....
......
கொமாரு...... இன்னிக்கு சாப்பிட்ட கீரை இருபது நாளுக்கு முன்னாடி விதைச்சது. இருபது நாளைக்கு பிறகு கீரை வேணும்னா..... இன்னிக்கு விதைக்கணும்.
இன்னைக்கு நடவு பண்ணுனாதான் ரெண்டு மாசம் கழிச்சி காய்கறி சாப்பிடமுடியும். அதனால விவசாயம் மட்டும் நிக்கவே கூடாதுப்பா......
வெற்றிலையை மெல்ல துவங்கினார். எனக்கு சில விஷயங்கள் புரிய துவச்கியது. ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சரி.... அப்படி பாடுபட்ட காய்கறி பழத்தையெல்லாம் விற்க படாதபாடு பட வேண்டியிருக்கு. நல்ல விலையும் கிடைக்கல...
யாரோ சாப்பிடறதுக்கு..... யாரோ சம்பாதிக்கறதுக்கு நாம ஏன் கஷ்டபடணும்...... அடுத்த கேள்வி கேட்டேன் தாத்தவின் தோல்வியை எதிர்பார்த்தேன்.......
டேய் கொமாரு...... அரசாங்கம் ஒரு மிகப்பெரிய இயந்திரம்பா....... அதுல ஒண்ணு ரெண்டு குறை இருக்கும்..... அதையே சொல்லிகிட்டு இருக்க கூடாது.
சரி..... இப்படி நெனச்சிக்க....... இந்த சூழ்நிலைல தன்னலம் பார்க்கமா வேலை செய்ற போலீஸ்காரங்க, டாக்டருங்க,நர்ஸுங்க, சுகாதார பணியாளர்களுக்காக விவசாயம் பண்றதா நெனச்சிக்க........
நெல்லுக்கு பாயுற தண்ணி ..... கொஞசம் புல்லுக்கும் போற மாதிரி
மத்தவங்களும் சாப்பிட்டுட்டு போகட்டும்.......
வெற்றிலை எச்சிலை துப்பி விட்டு சிரித்தார் தாத்தா........
நிமிர்ந்து பார்ததேன். தாத்தாவிடம் வெற்றி களிப்பு இல்லாததால் எனக்கு தோல்வி தெரியவில்லை.
அம்மி அரைக்க துவங்கியது அம்மாவின் சிரிப்போடு....
நான் போனை எடுத்தேன்.......
சொட்டுநீர் ..... கம்பெனிங்களா..... நம்ம வயல் ரெடியாயிருக்குது. வர்றிங்களா....
வாங்க...... நாங்க பார்த்துக்கிறோம்...எந்த தொழில் நின்று போனாலும் விவசாயம் மட்டும் இருந்தால் உயிர் வாழ்ந்து விட முடியும்.ஆனால் அனைத்து தொழில்களும் இயங்கி விவசாயம் நின்று போனால் உலகத்தில் ஒரு உயிரினமும் உயிரோடு இருக்காது..
........
சூரியன் உதிப்பதும் நிற்பதில்லை
விவசாயி விளைவிப்பதும் நிற்பதில்லை...
அன்புடன்.
*நீங்கள் எப்போதும் கண்டுகொள்ளாத,ஏளனப்படுத்தப்படும்,எல்லா கம்பனி பொருளுக்கும் அவனே செலவு எவ்வளவு அது போக லாபம் எவ்வளவு என கணக்கிடும் நிலையில் தன் உற்பத்தி செய்த பொருளுக்கு அவனால் விலை நிர்ணயம் செய்யமுடியாத துரபாக்கியசாலி விவசாயிகள் .*


Kaligounder Pulli

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Mylapore -a vivid description

Chithra Viswanathan is with Usha Sridhar . 29/04/2020 மதுரையில் இருந்து........ நான் மாண்புமிகு மதுரையில் பிறந்து வளர்ந்து, சென்னயில் வாழ்க்கைப் பட்டேன் !புக்ககம் மயிலையில் அமைந்தது. மதுரை ஆனி வீதி, ஆவணி மூல வீதி எ ன்று சுற்றியவளுக்கு, மயிலை பிரமிப்பைத் தந்தது..மாட வீதி, பிடி படவே, ‘நாட்கள் ஆனது சற்று கூச்சமாகவே இருந்தது ! என் கல்யாணப் புடவைகள் எல்லாம் சம்பூர்ண சாஸ்திரி கடையில் வாங்கியதால், அந்த கடையைப் பார்க்க விரும்பினேன்.அந்த எளிமை எனக்கு வியப்பைத் தந்தது !!வருடா வருடம் தீபாவளிக்கு புடவைகள் ராசி கடையில் வாங்குவது தான் என் புக்ககத்துக்கு ராசி!அப்பொழுது அது ஒரு நாகரீகம் கூட! அம்பிகா அப்பளம் துடங்கிய புதிது. மிகச் சிறிய கடை. அதன் வளர்ச்சி என் கண் முன்னே தான் நடந்தது ! 1964 ல் என் தங்கை லண்டன் போகும்போது அங்கிருந்துஆவக்காய் ஊறுகாய் வாங்கிக் கொடுத்தது எனக்கு பெருமை பிடி படவில்லை!! ஶ்ரீ வித்யா மஞ்சள் குங்குமக் கடை மாமா மாமியை மிகவும் பிடித்துப் போனது. அந்த கடையின் மணம் இன்னும், என் மூக்கில் இன்னும் எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறது !! தெப்பக்குளம், எனக்கு, மது...