காடோடியில் ஒரு சிறு பாரா
என் தந்தை சொல்வார்.இந்த உலகத்தில் முதன்முதலில் பேசத் தொடங்கியது ஓடையில் ஓடும் நீர் தான் என்று. அப்போது தாவரங்கள் கிடையாது; பறவைகள் கிடையாது; விலங்குகள் கிடையாது; மனிதர்களும் கிடையாது. மனிதரே இல்லை என்கிற போது அவர்களின் மொழிகள் மட்டும் எங்கே இருந்திருக்கப் போகின்றன? எனவே பேசுவதற்கு ஆளில்லாமல் இருந்த நீர்தான் பேச்சுத் துணைக்கு முதலில் தாவரங்களை முளைக்க வைத்ததாம். அத்தாவரங்கள் தாம் பேசுவதற்காக பூக்களைப் படைத்ததாம். பூக்கள் தாம் பேச கனிகளைச் சமைத்தது. கனிகள் தாம் பேச பறவைகளை அழைத்தது. இப்படி வரிசையாக வந்து மனிதர்களில் முடிந்தது. இந்த மனிதர்களுக்கு அப்போதெல்லாம் மற்ற மனிதர்களின் முகம்தான் தெரியும். தன் முகம் எப்படி இருக்கும் என்றே தெரியாது. மனிதர் மீது இரக்கப்பட்ட ஓடை நீர், இந்தா உன் முகத்தைப் பார்த்துக்கொள் என்று தன்னையே கண்ணாடியாக மாற்றி மனிதருக்கு அவரையே அடையாளம் காட்டியது. அதுவொரு ஓடும் கண்ணாடி. பேசும் கண்ணாடி. அக்கண்ணாடியோடு எல்லா உயிர்களும் இன்னமும் உரையாடிக்கொண்டு இருக்கின்றன. உரையாடலை நிறுத்திய முதல் உயிரி, முதல் உயிரி மட்டுமல்ல ஒரே உயிரியும் மனிதர்தான். மனிதர்கள் எப்போது தனக்கென ஒரு கண்ணாடியை உருவாக்கி இனி எல்லோரும் இதில் முகம் பாருங்கள் என்று சக மனிதர்களுக்குச் சொன்னார்களோ அப்போதே இயற்கை தந்த கண்ணாடியின் மீது கல்லைப் போட்டு உடைத்துவிட்டனர் என்று சொன்ன என் தந்தையின் கூற்று எவ்வளவு மெய் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்
- காடோடி

Comments
Post a Comment