Skip to main content

சாப்பாட்டுராமன்

காலை 11 மணி. செல்போன் சிணுங்கியது எடுத்து ஆன் செய்தேன்.
ஹலோ சார் உங்க பேரு சாமிநாத பட்டரா?
ஆமா நீங்க யாரு?
இது தானே உங்க அட்ரஸ்?
ஆமாம் சார் அதே தான்.
இப்ப எங்க இருக்கீங்க?
வீட்டுல தான் சார் சொல்லுங்க!
பேசலாமா ?
தாராளமா பேசலாம், மாடி ரூம் நான் மட்டும் தனியா தான் இருக்கேன். சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்க யாரு?
சார் நான் ஹெல்த் டிப்பார்ட்மெண்ட் ல இருந்து பேசுறேன். நேத்திக்கு நீங்க டெஸ்ட் அட்டர்ன் பண்ணினீங்களா?
ஆமா சார்! மீனாட்சி அம்மன் கோயில் வாசல்ல வச்சு நடந்ததே அந்த கேம்ப் ல ஸ்வாப் டெஸ்ட் எடுத்துக்கிட்டேன்.
உங்க வயசு சார்?
52 ஆகுது. ஓகே என்ன சார் டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சா?
இல்லை. உங்க வீட்டுல எத்தனை பேர் இருக்கீங்க?
நானு, அம்மா, ஒய்ஃப், ரெண்டு டாட்டர்ஸ் மொத்தம் 5 பேரு இருக்கோம் சார்.
சார் நீங்க எங்க வேலை பார்க்குறீங்க?
மீனாட்சி அம்மன் கோயில்ல பூஜை பண்றேன்.
சமீபத்தில் எங்கேயாவது வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்தீங்களா?
இல்லையே சார் பரவாயில்லை தைரியமா சொல்லுங்க என்ன டெஸ்ட் ரிசல்ட் எனக்கு பாசிட்டிவ் ன்னு வந்திருக்கா?
அவர் பதட்டமாகி... ஐயோஅதுல்லாம் இல்லை சாமி!
அட சும்மா பயப்படாம சொல்லுங்க தம்பி G.H. க்கு கூட்டிட்டு போறதுக்கு வண்டி ஏதாச்சும் வருமா இல்லை நானே போய்க்கனுமா?
இல்லை சாமி அதுல்லாம் வேண்டாம்.
துணி மணி ரெண்டு செட் எடுத்துக்கிட்டா போதுமில்லையா? செல்போன் சார்ஜர் அலவ் பண்ணுவீங்களா?
சாமி நீங்க என்ன ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க விட்டா பெட்ல போயி நீங்களே அட்மிட் ஆயிருவீங்க போல?
அட என்ன தம்பி இங்கேயும் செல்லை நோண்டிக்கிட்டு சும்மா தான் இருக்கேன்.
அதையே அங்க வந்து பண்ணிட்டு போறேன். அவ்வளவு தானே?
சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தபடி...
சாமி எல்லாரும் ஹெல்த் டிப்பார்ட்மெண்ட் ன்னு சொன்ன உடனே பயந்துக்கிட்டு பதிலே சொல்ல மாட்டேங்குறாங்க இல்லேனா செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுறாங்க! நீங்க என்ன சாமி எங்களையே கலாய்க்குறீங்க?!
தம்பி ரெண்டு நாளைக்கு முன்னால பேப்பர் ல பார்த்தேன் கொரோனா வார்டு ல கொடுக்கிற சாப்பாட்டு மெனு ன்னு.
படிக்கும் போதே நாக்குல எச்சில் ஊறிச்சு. எங்கே நமக்குல்லாம் கிடைக்கப் போவுது ன்னு இருந்துட்டேன். இப்ப நல்ல சான்ஸ் வந்துருக்கு... ஆண்டவனா பார்த்து என்னை 21நாளு 21 வகை உப்புமா ல இருந்து காப்பாத்த வழி பண்ணி இருக்காரு. விடலாமா?
எப்புடி

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Mylapore -a vivid description

Chithra Viswanathan is with Usha Sridhar . 29/04/2020 மதுரையில் இருந்து........ நான் மாண்புமிகு மதுரையில் பிறந்து வளர்ந்து, சென்னயில் வாழ்க்கைப் பட்டேன் !புக்ககம் மயிலையில் அமைந்தது. மதுரை ஆனி வீதி, ஆவணி மூல வீதி எ ன்று சுற்றியவளுக்கு, மயிலை பிரமிப்பைத் தந்தது..மாட வீதி, பிடி படவே, ‘நாட்கள் ஆனது சற்று கூச்சமாகவே இருந்தது ! என் கல்யாணப் புடவைகள் எல்லாம் சம்பூர்ண சாஸ்திரி கடையில் வாங்கியதால், அந்த கடையைப் பார்க்க விரும்பினேன்.அந்த எளிமை எனக்கு வியப்பைத் தந்தது !!வருடா வருடம் தீபாவளிக்கு புடவைகள் ராசி கடையில் வாங்குவது தான் என் புக்ககத்துக்கு ராசி!அப்பொழுது அது ஒரு நாகரீகம் கூட! அம்பிகா அப்பளம் துடங்கிய புதிது. மிகச் சிறிய கடை. அதன் வளர்ச்சி என் கண் முன்னே தான் நடந்தது ! 1964 ல் என் தங்கை லண்டன் போகும்போது அங்கிருந்துஆவக்காய் ஊறுகாய் வாங்கிக் கொடுத்தது எனக்கு பெருமை பிடி படவில்லை!! ஶ்ரீ வித்யா மஞ்சள் குங்குமக் கடை மாமா மாமியை மிகவும் பிடித்துப் போனது. அந்த கடையின் மணம் இன்னும், என் மூக்கில் இன்னும் எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறது !! தெப்பக்குளம், எனக்கு, மது...