# மதுரை # குஞ்சரத்தம்மா ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தை ப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில்...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு