OXFORD DICTIONARY ல வெள்ளைக்காரன் காலத்திலேயே நம்ப ஊரு KUMBAKONAM இடம் பெற்றிருந்தது .
என்ன அர்த்தம் போட்டிருந்தான் தெரியுமா ? PLACE OF EDUCATED ROGUES என்று தான் !
ராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனவுடன் போராடித்தான் அந்த வரியை நீக்க வைத்தார் . அந்த பின்னணி இது தான் .
மைலாப்பூரைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அவரது பார்யாவும் ( அதாங்க மனைவி ) அந்த காலத்தில் கும்பகோணம் செல்லும் ரயிலில் ஏறினர் . அவர் கட்டுக்குடுமியுடன் பஞ்சகச்சம் கட்டியும் மாமி மடிசார் புடவையிலும் ஒரு துணிப்பையில் காய்கறி மற்றும் கூஜாவில் தண்ணீர் மற்றோரு சின்ன மஞ்சப்பையில் கோகுலாஷ்டமி பக்ஷணம் (இனிப்பு மற்றும் காரம்) சகிதமாக அமர்ந்து இருந்தனர் . பெட்டியில் கூட்டம் இல்லை .
ரயில் கிளம்புவதற்கு விசீல் ஊதியதும் இரண்டு வெள்ளைக்காரங்க ஒடி வந்து பெட்டியில் ஏறி வக்கீலுக்கு எதிரே காலியாக இருந்த பெஞ்சில் அமர்ந்தனர் . வண்டி கிளம்பியதும் வெள்ளைக்காரங்களுக்கு எதிரே இருந்த வக்கீல் தம்பதிகளின் நடை உடை பாவனைகளை தங்களுக்குள் கிண்டலடித்து பேசிக்கொண்டிருந்தனர் .
எதிரில் உள்ள ஆள் ஆங்கிலம் தெரிந்த ஒரு வக்கீல் என்பது அவர்களுக்கு தெரியாது . வக்கீலுக்கு ரத்தம் கொதித்தது . ஆனால் என்ன செய்ய முடியும் ? நடப்பது வெள்ளையர் ஆட்சி.
சிறிது நேரம் கழித்து வெள்ளைக்காரங்க தாங்கள் கொண்டு வந்த ஆப்பிள்களை பேனாக்கத்தி முலம் வெட்டி WINE ல முக்கி சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தார்கள் .
வக்கீல் மட்டும் தூங்கவில்லை . அப்போது தான் அந்த யோசனை அவருக்கு உதித்தது . துணிப்பையில் மார்க்கெட்டில் வாங்கிய கருணைக்கிழங்கை பெரிய அளவில் ஒன்று எடுத்து தன் பேனாக்கத்தியின் மூலம் தோலை உரித்தார். சிவப்பு நிறத்தில் இருந்த கிழங்கை அழகான சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டார் .
பொழுது விடிந்து வண்டி கும்பகோணத்தை நெருங்கும் வேளையில் தன் பையிலிருந்த ஒரு தொன்னையை எடுத்து அதில் இரண்டு முறுக்கு சீடை மற்றும் வெட்டிய சிவப்பு கருணைக்கிழங்கு துண்டுகளை வைத்து PLEASE HAVE THIS INDIAN APPLE & OUR SOUTH INDIAN TREAT என்று மட்டும் சொல்லிவிட்டு வக்கீல் தம்பதிகள் கும்பகோணத்தில் இறங்கி விட்டனர் .
வெள்ளைக்காரங்க கும்பகோணம் தாண்டி எந்த இடம் போனார்களோ தெரியவில்லை . முறுக்கு சீடையை ருசித்து சாப்பிட்டு விட்டு கருணைக்கிழங்கு துண்டுகளை WINE ல முக்கி நான்கு துண்டுகளை வாயில் கடித்து முழுங்கினர் . அவ்வளவு தான் ! தொண்டையில் தாங்க மூடியாத அரிப்பு ஆரம்பித்தது .
துடிக்க ஆரம்பித்து எவ்வளவு தண்ணீர் குடித்தும் அடங்கவேயில்லை .அதற்கு ஒரே மருந்து புளியை உள் நாக்கில் தேய்க்க வேண்டும் என்பது வெள்ளைக்காரனுக்கு எப்படி தெரியும் ?
அவர்கள் கருணைக் கிழங்கை பார்த்தது கூட கிடையாது . அதன்பிறகே OXFORD DICTIONARY ல் அவ்வாறு எழுதினர் . நாடு சுதந்திரமடைந்து ராஜாஜி கவர்னர் ஜெனரலாகி அந்த வரி நீக்கப்பட்ட பிறகு தான் நடந்த நிகழ்ச்சியை விலா வாரியாக அந்த வக்கீல் வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தினார் !
__
அந்த வக்கீல் யார் தெரியுமா?
வக்கீல் ஸ்ரீமான் குப்புஸ்வாமி சாஸ்திரிகள். கும்பகோணம் முனிசிபல் சேர்மன். மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் முன்னணி வழக்கறிஞர்.
Comments
Post a Comment