Skip to main content

Posts

Showing posts from July, 2020

விமு' யாரை விட்டது--- பாக்கியம் ராமசாமி

*'விமு' யாரை விட்டது?* -பாக்கியம் ராமசாமி. எதிர் ஃபிளாட் விமு கதறக் கதற அழுதுகொண்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனது பெற்றோர் ஸ்கூட்டரில் அவனை ஸாண் ட்விச் செய்து கொண்டு கிளம்பினர். 'அவனுக்கு ஒன்னரை வயசாகிறது. ஒண்ணுமே தெரியலை' என்று விமுவின் அம்மா என் மனைவியிடம் அங்கலாய்ப்பட்டாள். பாவம், ஒண்ணரை வயசுக் குழந்தை என்னத்தென் கண்டது என்று ஒரு தினம் என் மனைவி கேட்டு விட்டாள். அதற்கு அந்த இளம் தாயார் சொன்னாள். "மற்ற ஒண்ணரை வயசுகளுக்கெல்லாம் தெரியறதே மாமி. என்னமாக ஒவ்வொண்ணு பெயிண்ட் செய்யறது, பாட்டுப் பாடறது, ஹாண்ட் வொர்க் செய்யறது, தானே எடுத்துச் சாப்பிடறது, போய்ப் பாருங்கோ." குழந்தை விமுவை ஒண்ணாம் வயசு முடிந்ததுமே ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள். அந்த ப்ளே ஸ்கூலில் இடம் கிடைப்பது என்பது ரொம்ப ரொம்பக் கஷ்டமாம். எப்படியோ விமுவின் அப்பா யார் யாரையோ சிபாரிசு பிடித்து இடம் வாங்கி விட்டார். .......எதிர் வீட்டு விமு கதறக் கதற அழுது கொண்டே கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனுக்கு வயசு ஒன்றரைதான். ஆனால் அவன் பெற்றோர் அதற்குள் அவனை கம்ப்பூட்...

Self Appraisal.

The story I want to share to you is the story of Self Appraisal. Give your best and the world comes to you!!!! Hope you learn from it and like it.. Thank you..😊 Siddharth Singh on Quora

கும்பகோணம் குசும்பு..😂

OXFORD DICTIONARY ல வெள்ளைக்காரன் காலத்திலேயே நம்ப ஊரு KUMBAKONAM இடம் பெற்றிருந்தது . என்ன அர்த்தம் போட்டிருந்தான் தெரியுமா ? PLACE OF EDUCATED ROGUES என்று தான் ! ராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனவுடன் போராடித்தான் அந்த வரியை நீக்க வைத்தார் . அந்த பின்னணி இது தான் . மைலாப்பூரைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அவரது பார்யாவும் ( அதாங்க மனைவி ) அந்த காலத்தில் கும்பகோணம் செல்லும் ரயிலில் ஏறினர் . அவர் கட்டுக்குடுமியுடன் பஞ்சகச்சம் கட்டியும் மாமி மடிசார் புடவையிலும் ஒரு துணிப்பையில் காய்கறி மற்றும் கூஜாவில் தண்ணீர் மற்றோரு சின்ன மஞ்சப்பையில் கோகுலாஷ்டமி பக்ஷணம் (இனிப்பு மற்றும் காரம்) சகிதமாக அமர்ந்து இருந்தனர் . பெட்டியில் கூட்டம் இல்லை . ரயில் கிளம்புவதற்கு விசீல் ஊதியதும் இரண்டு வெள்ளைக்காரங்க ஒடி வந்து பெட்டியில் ஏறி வக்கீலுக்கு எதிரே காலியாக இருந்த பெஞ்சில் அமர்ந்தனர் . வண்டி கிளம்பியதும் வெள்ளைக்காரங்களுக்கு எதிரே இருந்த வக்கீல் தம்பதிகளின் நடை உடை பாவனைகளை தங்களுக்குள் கிண்டலடித்து பேசிக்கொண்டிருந்தனர் . எதிரில் உள்ள ஆள் ஆங்கிலம் தெரிந்த ஒரு வக்கீல் என்பது அவர்களுக்கு தெரியாது . வ...

சில சிறப்பான பழக்கங்கள்

தினசரி வாழ்க்கையில் நீங்கள் கடைபிடித்து வரும் சில சிறப்பான பழக்கங்கள் (ஹாபிட்) என்னென்ன? 1. அலுவலகத்தில் எந்த வேலையையும் தள்ளிப் போடுவதில்லை. முப்பது வருடங்களாக பார்த்த வேலையிலும் சரி, இந்த முப்பது நாட்களாக பார்க்கும் வேலையிலும் சரி - எதிலும் விரைவான, உறுதியான முடிவெடுப்பது. நேரம் தவறுவதில்லை. வாட்சை பார்க்காமல் பொழுதை செலவளிப்பது என்றால் அலுவலகத்தில் மேலதிகாரியுடன், வீட்டில் மனைவியுடன் மட்டும்தான். மற்றபடி நேர அளவு நிர்ணயித்துதான் டீம் மீட்டிங்; தாண்டி விட்டால் ஸ்டாண்டிங் மீட்டிங்தான். மேலதிகாரியின் ரகசியங்களை காப்பது. பணியில் தவறினாலும், பணியாளர்களின் வருமானத்தில் கை வைக்காமல் தண்டிப்பது. (தண்டனை அவருக்கே, குடும்பத்திற்க்கில்லை) எதிர்கால திட்டங்களை யாருடனும் பகிர்வதில்லை. முக்கியமாக பணி சார்ந்த எதிர்கால திட்டங்களை. வருமானத்தில் 5% வேலை சார்ந்த படிப்பு அல்லது பயிற்சிக்கு ஒதுக்குவது. வேலையில் அடுத்த நிலைக்கு எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பது. அலுவலகத்தில் அனைவருக்கும் உரிய மரியாதையளிப்பது. அலுவலக அரசியலை தவிர்ப்பது. 2. வீட்டில் ஒரு வேலையும் இல்லாவிட்டாலும், அதிகாலை வேளையில்...

படித்ததில் பிடித்தது – பட்டு வாத்தியார்

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், 'அம்மா’ என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே, 'ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!’ என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை. 'வானம் வடக்கே கருக்கலா இருக்கு மழை வருமாட்டு இருக்கு மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை. 'ஆடிப் பட்டம் தேடி விதை’ என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை. 'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை. 'செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்’ எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு, 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எ...

I will no longer vaccinate my children by Dr Jim Meehan, MD

Dr Jim Meehan, MD ...I will no longer vaccinate my children... ...because I am a well trained medical doctor and former medical journal editor that has studied the vaccine research and analyzed both sides of the evidence. ...because I know how to read the medical literature, recognize bias and discern characteristics of good and fraudulent research. ...because I know that too much of the science supporting vaccines is fraudulent drivel bought and paid for by the vaccine manufacturers themselves. ...because I understand the risks of vaccination as well as the benefits of my children and grandchildren encountering and overcoming the wild type diseases naturally. ...because I know that diseases like mumps, measles, and chickenpox aren't dangerous and untreatable diseases that justify the risk of injecting toxic ingredients into the tissues of my children. ...because I have seen the evidence of neurotoxicity from ingredients like aluminum, polysorbate 80, human DNA...

சுந்தரம் டாக்டர்

சுந்தரம் டாக்டர் வந்தார் என்றால் எங்கள் சோடா கம்பெனி கலகலப்பாகி விடும். அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார்.”லேடுபாடு”, “ஆட்டை தூக்கு மாட்ல போட்டு.. மாட்டைத் தூக்கி ஆட்ல போட்டு..”என்பதெல்லாம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் சில சொலவடைகள். ஆம்பலாப்பட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட தினங்களில் சைக்கிளில் பாப்பாநாடு வருவார். வேட்டி, மேலே புஷ் கோட் மாதிரி ஒரு சட்டை போட்டிருப்பார். பழைய தமிழ் சினிமாப் படங்களில் டாக்டர்கள் சிவப்பாக ஒரு தோல் பை வைத்திருப்பார்களே அதே போல ஒரு பை சைக்கிளில் தொங்கும். அந்தப் பையில் ஒரு சிரிஞ்ச், சில ஊசிகள், கொஞ்சம் பென்சிலின் ஊசி மருந்து, பென்டிட் சல்ஃபா மாத்திரைகள்,சில காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு மருந்துகள், இன்னும் அவருக்குத் தெரியும்,அந்தப் பகுதியில் என்னென்ன மருந்துகள் அதிகம் தேவைப்படும் என. அவற்றில் கொஞ்சம் இருக்கும். அப்போது எங்கள் ஊரில் ஃபா ர்மசி கிடையாது. முக்கிய மருந்துகள் வாங்க வேண்டுமானால் பட்டுக்கோட்டை அல்லது ஒரத்தநாடு போக வேண்டும். பாப்பாநாடு வந்தால்ஒரு இரண்டு அல்லது மூன்று இடங்களில் அவர் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இருப்பார...

காமராசர் என்கிற மனிதாபிமானி

*கடவுளை பற்றி காமராசர்* "நீங்க பல தெய்வ வழிபாட்டை வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?" என்று கேட்டேன் காமராஜர்: அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லா ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,. ஜெருசலத்தல இருக்கிறவன் கர்த்தர் ன்னான், அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு உட்பிரிவுகளை உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு...

காமராஜர்

கொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும் , இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில்  வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க்கின்றன . காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துகிறார் அண்ணா . தேர்தல் முடிவுகள் வானொலி அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன . சென்னையில் உள்ள அண்ணாவின் வீடு குதூகலத்தில் இருக்கிறது . விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் வேட்டுச் சத்தம் அதிர்கிறது . கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள் . கடும் கோபத்தோடு வீட்டிலிருந்து  வெளியே வரும் அண்ணா , கட்சிக்காரர்களைக் கடிந்துகொள்கிறார் . “ உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள் . தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர் . இன்னொரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் . காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்கு உரியதல்ல . அது நம்முடைய தோல்வி !” தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வரும் சீனிவாசனிடமும் இதையே சொல்கிறார் அண்ணா . “ என்னை மன்னித்துவிடு சீனிவாசா ... உன்னுடைய வெற்றி தர வேண்டிய மகிழ்ச்சியை காமராஜரி...