காட்டில் கிடக்கும் மரக் கிளைகள் ஒன்றை ஊன்றுக் கோலாக பயன்படுத்த சேகரித்து சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறார் போதி தர்மர். அவர் கையில் அம்பு அடிபட்ட பறவை ஒன்று விழுகிறது. ‘இவளின் முன் ஜென்ம வாழ்க்கை இவளை இன்று பறவையாக மாற்றி உள்ளது. விளைவுகள் மற்றும் சூழல்களால்.. அம்பால் அட்பட்டு துன்புற நேர்ந்தது. உன்னைக் காப்பாற்றுகிறேன். அடுத்து மனித பிறவி எடுத்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்’ என எண்ணியவாறே பறவைக்கு முதலுதவி செய்து பறக்க விடுகிறார். அடிபட்ட பறவையைத் தேடி வேடன் அங்கே வருகிறான். “விலங்குகளையா தேடுகிறாய்!?” என போதி தர்மர் கேட்கிறார். “ஆமாம்” என கூறிக் கொண்டே பறவையைத் தேடிக் கொண்டே இருக்கிறான். “ஓர் அம்பால் எத்தனை விலங்கை தைப்பாய்!?” “ஒன்று” என சொல்லிக் கொண்டே நிமிர்ந்து, “அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டு” என்று சிரிக்கிறான் வேடன். “இரண்டு? ஓர் அம்பில் இரண்டு!?” என்று கேட்டு விட்டு, “எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கர்ப்பமான மிருகமொன்றை அடிப்பேன்” என்கிறார் போதி தர்மர். “ஆகா.. அப்ப இரண்டிற்கும் மேல்” என்று குதூகலிக்கிறான் வேடன். “நான் ஒன்றைக் கொன்றால்.. நான் கொல்லும் அந்த ஒன...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு