Skip to main content

The truth about employment

வேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம்.
கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் சிலபேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனையோருக்கு ஏமாற்றம். "மைக்ரோசாப்ட்" கிடைத்துவிட்டதென்று சில இளம்பெண்கள் ஏனையோரை ஏளனப் படுத்துகிறார்கள். "கனவு நிறுவனத்தில்" இடம் கிடைக்காத மாணவிகள் வெம்பி கிடைத்தவாய்ப்பையும் நழுவவிட்டு பெற்றோர்களுக்கு பாரமாய் நிற்கிறார்கள்.
அன்றியும் பிடித்த நிறுவனத்தில் சேர்ந்த சிலமாதத்திலேயே பலர் ஓடி விடுவதை காணலாம். பொருந்துவதில்லை. செயற்கை நீரூற்றுக்கள், ஏக்கர் கணக்கில் புல்வெளிகள், வானளாவிய கண்ணாடி மாளிகைகள், வரம்பற்ற காபி இவர்களுக்கு கசக்கிறது. பெற்றோர்களுக்கு காணொளியில் காட்டி பெருமையுடன் வலம் வந்த அலுவலக வளாகம், அடுத்த மாதமே சிறைக்கூடமாக கசக்கிறது.
இதன் காரணம் என்ன ?
பில்லியன் கோடி பன்னாட்டு கம்பெனிகள், சுவற்றில் சிரிக்கும் பெரு முதலாளிகள், அவர் படைத்த நிறுவனங்கள், நவீன வளாகங்கள், பூங்காக்கள், மைதானங்கள், உடற்பயிற்சி மையங்கள், பளிங்கு கோயில்கள், நவீன வசதிகள், மைய குளிரூட்டிகள் - அனுபவித்து பெருமை கொள்ளாமல் ஏன் பலருக்கு வாழ்வு கசக்கின்றன ?
ஏனெனில் அவை உங்களுக்கு சொந்தமில்லை. அதன் அருகில் கூட போகமுடியாது. நீரூற்றின் முன் "செல்பி" எடுத்தால் செல்போனை பிடுங்கிவிடுவார்கள். அழகுப்பனையின் தூக்கணாங்குருவியை நின்று அண்ணாந்து பார்த்தால், வண்டியின் காற்று பிடுங்கப்படும். புல்வெளியில் நடந்தால் காவலர் விசிலடித்து கூப்பிடுவார். அடையாள அட்டை தொலைந்தால், தெருநாயைப்போல அலையவிடுவார்கள். உங்கள் கழுத்தில் தொங்கும் காந்தப்பட்டி ஒரே ஒரு கட்டிடத்தின், ஒரே ஒரு தளத்தின், ஒரே ஒரு கதவை மட்டுமே திறக்கும்.
உங்கள் ஒவ்வொரு அசைவையும் நிலவறையிலிருந்து காணொளி கருவியால் யாரோ பார்த்துக்கொண்டிருப்பார்கள். நிறுவனத்தில் 20 ஆண்டுகள் வேலைசெய்தாலும் நீங்கள் பார்க்காத அறைகள் எத்தனையோ இருக்கும்.. இவை எதுவுமே உங்களுக்கு சொந்தமில்லை. ஒருநாளும் நீங்கள் முதலாளியுடன் பேசமுடியாது. எத்தனையோபேர் வினோதமாக நடந்துகொள்வார்கள். உங்களிடம் எதுவும் விளக்கப்படாது.
ஆகவே என்ன செய்தால் நம் யுவர்களும் யுவதிகளும், பணியாளர்களும் விரும்பி வேலை செய்வார்கள் ? எதனால் அலுவல் சலிக்கிறது ?
மனிதர்களின் ஆன்மா எதற்காக ஏங்குகிறது என்றெல்லாம் பல ஆண்டுகள் யோசிப்பதுண்டு. யோசனைகளை சல்லடைபோட்டு கழித்துக்கட்டி, முத்தாக சிலவற்றை திரட்டி அதனை பரிசோதனைக்கு உட்படுத்தியதுண்டு. பலபேரிடம் விவாதித்து இதுதான் காரணம் என்று வடிகட்டி பார்த்ததில் ஒன்று புரிந்தது.
கணிதத்தில் தேற்றம் என்று உண்டு. அதாவது புடம்போட்ட உண்மைகள். கேள்விக்கு அப்பாற்பட்டது. மறுதலிக்க இயலாதது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாதம் செய்து வென்ற உண்மைகள்.
இப்படியாக அனுபவித்து கண்டுபிடித்த மொத்தம் 5 எண்ணிக்கையிலான அடிப்படை கூறுகளை இங்கே தருகிறேன். இவை இருந்தால் வேலை செய்யலாம். இவை குறைந்தால் ஓடிவிடவேண்டும். இந்த காரணிகள் அல்பமாக தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை.
அவையாவன.
1. சுத்தமான கழிப்பறை
2. தரமான கட்டுகடங்கும் விலையில் உணவகம்
3. முண்டியடிக்காமல் நிறுத்த தேவையான வாகன நிறுத்துமிடம்..
4. அனாவசிய வலயத்தள கட்டுப்பாடுகள் இல்லாத அறிவை வளர்க்கும் கணினி, மேசை நாற்காலி.
5. குணமான அருகாமை மேலதிகாரி.
இவை இருந்தால் போதும். அது தெருவோர மார்வாடி கடையானாலும், பில்கேட்ஸ் கம்பெனியானாலும் வேலை செய்யலாம். இவை மட்டும்தான் தினம் தினம் வேலை செய்ய தேவை. இதைத்தவிர வேறு எதையும் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது. பெரிய கம்பெனியில் நீங்கள் ஒரு செலவு. கடன்பாடு.
ஆகவே நம்முடைய இளைஞர்கள் தடுமாற்றமில்லாமல் வேலையை தேர்ந்தெடுக்க உதவுங்கள். உங்கள் வறட்டு கௌரவத்தை புகுத்தாதீர்கள்.
(சம்பளத்தை நிர்ணயிப்பது ஒருமுறைதான். தினம் நினைக்கப்போவதில்லை.)

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...